உளவுத்துறை ஐ.ஜி ஆசியம்மாள் மாற்றப்பட்டதன் பின்னணி என்ன? புதிய ஐ.ஜி செந்தில்வேலன் ஐ.பி.எஸ் யார்?
தமிழக உளவுத்துறை புதிய ஐ.ஜியாக டாக்டர் செந்தில் வேலன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஆசியம்மாள் உளவுத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவரை திடீரென மாற்றப்பட்டதற்கு காரணம் என்ன தெரியவில்லை என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் .
கள்ளக்கிறிச்சி பள்ளி விவகாரத்தில் உளவுத்துறை ஐ.ஜி ஆசியம்மாள் வேகமாக செயல்பட்டு கலவரமாக மாறப்போகிறது என்று முன் கூட்டியே உயர் அதிகாரிகளுக்கு நோட் போட்டிருந்தார். ஆனால் அதிகாரிகள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது தவிற உளவுத்துறையில் பணியாற்ற தனக்கு விருப்பம் இல்லை என்று ஐ.ஜி ஆசியம்மாள் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் உறவுத்துறைக்கு துடிப்பான இளைஞரை புதிதாக நியமித்து இருக்கிறது அரசு.
யார் இந்த செந்தில் வேலன் ஐ.பி.எஸ் ? உளவுத்துறை ஐ.ஜியாக பொறுப்பேற்பதன் முக்கியத்துவம் என்ன? மதுரை மாவட்டத்தை சேர்ந்த புஷ்ப ராஜாமணி அர்ச்சுனன் தம்பதியரின் இளைய மகன் தான் செந்தில் வேலன்.
இரண்டு சகோதரிகள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள், ஒரு சகோதரி தமிழகத்திலேயே வசித்து வருகிறார். மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து பட்டம் பெற்றார். செந்தில்குமார் சில காலங்கள் டாக்டராகவும் பணியாற்றி வந்தார்.
ஆனால் அவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். 2004 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். இந்திய அளவில் 84 வது இடத்தைப் பிடித்தவர்.
ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியானவுடன் ஹைதராபாத் போலீஸ் ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்றபோது அகில இந்திய அளவில் பெஸ்ட் ப்ரொபஷனர் விருது பெற்றார். செந்தில் வேலன் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஏ.எஸ்.பி ஆக பணியாற்றினார்.
பின்னர் கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் பணியாற்றியுள்ளார். 2008 ம் ஆண்டு சிதம்பரம் சிவசாமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து அரசின் பாராட்டைப் பெற்றார். செந்தில் வேலன் பணியாற்றிய அனைத்து காலத்திலும் அனைத்து வழக்குகளையும் திறம்பட விசாரித்து பெயரெடுத்தவர்.
மத்திய பணியில் பணியாற்றிக் கொண்டிருந்த செந்தில் வேலனை தமிழக அரசு உடனடியாக உளவுத்துறை ஐ.ஜியாக நியமித்து உத்தரவிட்டது. தான் பணியாற்றிய காலங்களில் எவ்வளவு சிறப்பாக கொலை வழக்குகளையும் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றினாரோ, அதேபோல இந்தப் பதவியிலேயும் மகுடம் சூடுவார் என்கிறார்கள். செந்தில்வேலனுடன் பணியாற்றி சக அதிகாரிகள்.