தமிழகத்தின் சிறந்த எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான மோகன ரூபன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளரும்,மூத்த பத்திரிகையாளருமான மோகன ரூபன்.
அந்த பதிவை நமது வாசகர்களுக்கு தருகிறோம். இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
லயோலா கல்லூரி
காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகி விட்டதாம். அதையொட்டி நிறைய பதிவுகளை முகநூலிலும், யூ டியூப்பிலும் பார்க்க முடிகிறது. அதேநேரம், சென்னை லயோலா கல்லூரி தொடங்கப்பட்டு நூற்றாண்டு நிறைவடைந் திருக்கிறது. அதைப் பற்றி யாராவது பதிவு போடுவார்களா என்று பார்த்தால், நான் பார்த்தவரை இதுவரை பெரிதாக எந்தப் பதிவையும் காணோம்.
ஓர் ஆங்கில நாளிதழில் திரு.ரகுராமன் என்பவர் லயோலா கல்லூரி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த கட்டுரையின்படி…
திருச்சி தூய வளனார் கல்லூரி
திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிரின்சிபாலாகப் பணிபுரிந்த இயேசு சபை குருவான அருட்தந்தை பெர்ட்ரம் என்பவர், சென்னையில் ஒரு கல்லூரியைத் தொடங்க நினைத்திருக்கிறார்.
திருத்தந்தை போப்
அதற்காக, வாடிகன் சென்று அப்போதைய போப் திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்டைச் சந்தித்து நிதியுதவி பெற்றிருக்கிறார். போப் தந்த தொகை ஒரு லட்சம் லீரா. (இத்தாலிய நாணயம்). அது முதல் உலகப்போர் முடிந்து பொருளாதார நெருக்கடியும், தேக்கநிலையும் நிலவிய காலம். போப் தந்த ஒரு லட்சம் லீரா, இந்திய ரூபாய் மதிப்புப்படி 27 ஆயிரம் ரூபாய்கள்தானாம்.
தொகை ஒரு லட்சம் லீரா. (இத்தாலிய நாணயம்).
நிலம் வாங்கி, கல்லூரி கட்ட அந்தப் பணம் போதாது என்பதால், திருச்சி தூய வளனார் கல்லூரியிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றிருக்கிறார் அருட்தந்தை பெர்ட்ரம்.
பிறகு நிலம் வாங்கும் பணி, நுங்கம்பாக்கத்தில் அமைந்திருந்த ஒரு நீர்நிலையில் இருந்து ரயில்பாதை வரை 50 ஏக்கர் நிலத்தை, 60 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியிருக்கிறார் அருட்தந்தை பெர்ட்ரம். அந்த இடம் அப்போது வயல்களும், சூளைகளும் நிறைந்த பகுதி.
‘நகராட்சி எல்லைக்கு வெளியே(!) மின்சாரம், தண்ணீர் இல்லாத இந்த இடத்தை ஏன் வாங்கினீர்கள்? ஸ்டெர்லிங் சாலைக்கு தெற்குப்புறம் உள்ள நிலத்தை வாங்கி இருக்கலாமே?’ என்று அப்போது சிலர் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.
(அந்த காலகட்டத்தில் ஸ்டெர்லிங் சாலைக்கு தெற்குப்புறம் காலி நிலமாகவே இருந்திருக்கிறது. அங்கங்கே நாலைந்து பங்களாக்கள் மட்டுமே இருந்திருக்கின்றன)
அருட்தந்தை பெர்ட்ரம்
ஸ்டெர்லிங் சாலைக்கு தெற்குப் புறம் நிலம் வாங்கும் அளவுக்கு பணமில்லை என்பதால்தான் அருட்தந்தை பெர்ட்ரம், தற்போது லயோலா கல்லூரி அமைந்துள்ள இடத்தை வாங்கியிருக் கிறார்.
1924ஆம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி லயோலா கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்திருக்கிறது. அடிக்கல் நாட்டியவர் அப்போதைய சென்னை ஆளுநரான வெலிங்டன் பிரபு. உடனிருந்து விழாவைச் சிறப்பித்தவர் அவரது மனைவி லேடி வெலிங்டன்.
1924ஆம் ஆண்டு லயோலா கல்லூரியின் முதல்தளம் உருவாகி இருக்கிறது. நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கட்டடம் கட்டும் பணியை வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள்.
அப்போதைய சென்னை ஆளுநரான வெலிங்டன் பிரபு.
ஆங்கில ஐ வடிவத்தில் லயோலா கல்லூரியின் முதன்மைக் கட்டடம் கட்டப்பப்பட்டு இருக்கிறது. கட்டடத்துக்கான எஃகு உத்தரங்கள், கப்பல் மூலம் பிரிட்டனில் இருந்து வந்திருக்கின்றன.
மூன்று மாடி கட்டடமாக முதன்மை கட்டடம் உயர்ந்தபோது, தரைத்தளத்தில் பிரின்சிபால் அறை, கல்லூரி அலுவலகம் உள்பட 17 அறைகள் இருந்திருக்கின்றன. இரண்டாவது தளத்தில் 9 அறைகள் இருந்திருக்கின்றன.
லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள தேவாலயம்
1925ஆம் ஆண்டு லயோலா கல்லூரியில் வெறும் 75 மாணவர்கள் மட்டுமே படித்திருக் கிறார்கள். மூன்று, பி.ஏ. பாடப்பிரிவுகள் மட்டுமே இருந்திருக்கின்றன. லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள தேவாலயம் 1930ல்தான் கட்டப்பட்டிருக்கிறது.
1927ல், 503 மாணவர்கள் லயோலா கல்லூரியில் கல்வி பயின்றிருக்கிறார்கள். 1942ல் மாணவர்களின் எண்ணிக்கை 1,387ஆக உயர்ந்திருக்கிறது.
இப்படியாகப் போகிறது அந்த தகவல்….
இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ‘லயோலா கல்லூரி அமைந்திருக்கும் நிலம் சிவன் கோயில் நிலம். 100 ஆண்டு குத்தகை’ என்றெல்லாம் அண்மையில் சிலபல கதைகள் எல்லாம் வெளி வந்ததே. அதெல்லாம் என்ன? அத்தனையும் பொய்யா கோப்பால்???