நடை பெறவுள்ள ஆவடி மாநகராட்சி நகர்மன்றத் தேர்தலில் புதிய மாற்றத்தை விரும்பும் ஆவடி மாநகராட்சி 37 வது வார்டு பொதுமக்கள்.
பொதுமக்களின் தேவைகளை புரிந்து கொண்டு செயல்படும் கவுன்சிலர் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.மக்கள் நீதி மையத்தின் கட்சியின் வேட்பாளரை பொதுமக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
கோபாலபுரம் சேர்க்காடு பகுதியில் உள்ள மக்கள் புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்று நினைக்கின்றனர்.பலம்வாய்ந்தஅரசியல் கட்சிகள் தங்களது கட்சிப் பணத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதில் கமிஷன் வாங்கிக்கொண்டு கல்லா கட்டுகின்றனர்.
ஆனால் மக்கள் நீதி மையத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் கே ஜே குணசீலன் தனது சொந்த பணத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
இதுகுறித்து சேக்காடு பகுதியை சேர்ந்த ராணி அம்மாள் என்பவர் கூறுகையில் குணசீலன் செய்திருக்கிற பணிகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது.அவர் தீபாவளி பொங்கல் போன்ற காலங்களில் எங்களுக்கு புடவை அரிசி பருப்பு என அனைத்தும் கொடுத்து உதவியவர்.
அவரைப்போன்று உதவி செய்பவர்கள் கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிறார்.
கோபாலபுரத்தில் சேர்ந்த முருகேசன் என்பவர் கூறுகையில் அதிமுக, திமுக என எந்தக் கட்சியும் நிவாரண பொருட்கள் வழங்கினாலும் குறிப்பிட்ட அந்த கட்சிக்காரர்
களுக்கோ அல்லது அவர்களது உறவினர்களுக்கோ மட்டும்தான் தருவார்கள்.
ஆனால் குணசீலன் கட்சி பாகுபாடு இன்றி ஜாதி மதம் பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா காலத்திலும் வெள்ளம் சூழ்ந்த மழை காலத்திலும் அனைவருக்கும் பாரபட்சமின்றி உதவி செய்தவர். மக்கள் பாராட்டும் மக்கள் நீதி மைய வேட்பாளர்.
37வது வார்டில் செயல்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி அதை தரம் உயர்த்தி எப்போதும் ஒரு மருத்துவரையும் ஒருவர் செய்யும் இருக்கும்படி செய்ய வேண்டும் என்கிறார் சுகன்யா.
அதேபோல தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்தி ஸ்மார்ட் கிளாஸ் ஆக உயர்த்தி தனியார் பள்ளியின் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வன்.
படித்தவர்கள் அதிகம் உள்ள 37-வது வார்டில் ஒரு நூலகம் கூட இல்லை.அதனால் தனது சொந்த பணத்தில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வகையில் பொது அறிவை வளர்க்கும் வகையில் தரமான புத்தகங்களை வாங்கி ஒரு புதிய நூலகத்தை சிறப்பாக உருவாக்கித் தருவேன் என்கிறார் வேட்பாளர் குணசீலன்.
சேர்க்காடு என்கிற இந்த பெயர் சேக்கிழார் காடு என்றுதான் பழைய காலத்தில் அடைக்கப்பட்டுள்ளது அது தற்போது அந்த பெயர் மருவி சேக்காடு என அழைக்கப்படுகிறது.
எனவே உண்மையான சேக்கிழார் காடு என்கிற இந்த பகுதியை தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதி இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி வரலாற்று சிறப்புமிக்க உண்மையைக் கண்டறிந்து சேர்க்காடு என்பதை மீண்டும் சேக்கிழார் காடு என அமைக்க பாடுபடுவேன் என்று உறுதியளிக்கிறார் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்.
வெற்றியின் விளிம்பு நிலையில் பிரகாசமான வெளிச்சத்தோடு நிற்கிறார் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் குணசீலன்.