chennireporters.com

#news-7 ரிப்போட்டர் நேச பிரபு சட்ட விரோதமாக தொழில் செய்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதால் தாக்கப்பட்டாரா?

பல்லடம் news-7 tamil செய்தியாளர் நேச பிரபு கொலைவெறி தாக்குதல் தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் தினம் தோறும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த பகுதியில் news-7 தொலைக்காட்சிக்கு பணியாற்றி வரும் நேச பிரபு அந்த பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் விபச்சாரம், கஞ்சா, ரியல் எஸ்டேட் ,  டாஸ்மாக்கில் கூடுதல் விலை,  கல்ல மது, விதிமுறைகளுக்கு எதுராக இயங்கும் பார் போன்ற சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் தொழில் செய்யும் ஆட்களிடம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தனக்கு கமிஷனாக அதாவது லஞ்சமாக  தரவேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்.அது தவிர ஆறு மாதங்களாக ஒரு பார் முதலாளியிடம் பணம் வாங்கி இருக்கிறார் அவர் இவரிடம் தொலைபேசியில்  பேசும் பேச்சு அச்சிலேயற்ற முடியாத வார்த்தைகளால் திட்டி பேசும் ஆடியோ வெளியாகி பத்திரிகை உலகையே அவமானத்தில் தலை குனிய வைத்தது.அது மட்டும் இல்லாமல் போலீசாருக்கும்  news-7 ரிப்போர்ட்டர் நேச பிரபு தாக்கப்பட்டதற்கு பெரும் காரணமாக இருந்திருக்கிறார்கள். காவலர்களிடம் தன்னை காப்பாற்றும்படி பல முறை பேசிய நேச பிரபு நேரடியாக  காவல் நிலையம் சென்று ஒருமுறை கூட காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. ஒரு பத்திரிகையாளர் தனக்கு கொலை மிரட்டல்  இருக்கிறது எந்த நேரத்தில் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் புகார் கொடுக்காமல் செல் போனில் மட்டும் போலிசுக்கு மட்டும் பல  தடவை தொலைபேசியில் அழைத்து சொன்னதற்கு காரணம் என்ன? நேச பிரபு வீட்டுக்கும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கும் கொஞ்ச தூரம் தான்.

புகார் கொடுத்தால்  தான் மிரட்டப்படுவதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும்.  மேற்படி நபருக்கும் ரிப்போட்டருக்கும் என்ன பிரச்சினை என்பதையும் புகாரில் குறிப்பிட வேண்டும் அதற்காகவே நேச பிரபு காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் தவிர்த்து வந்தார் என்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்.காமநாயக்கன்பாளையம்  காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏனென்றால் அவர்களுக்கும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் சமூகவிரோதிகளிடம் இருந்து அவர்களுக்கு மாதம்  கணிசமான தொகை லஞ்சமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே நேச பிரபு தொலைபேசியில் அழைத்ததற்கு எந்தவித  முனைப்பு காட்டாமல் போலீசார் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட எழுத படிக்கத் தெரியாத சில டுபாக்கூர்கள் பத்திரிகையாளர்களாக தன்னை காட்டிக்கொண்டு ஒவ்வொரு tasmac கடைகளிலும் தினமும் விசிட்டிங் கார்டை கொடுத்து மிரட்டி நூறு ரூபாய் முதல் 200 ரூபாய் வரை லஞ்சமாக  மிரட்டி பெற்று வருகின்றனர்.

கலெக்டரிடம் புகார் கொடுக்கும் சிஐடியு சங்கத்தின் தலைவர் ஆறுமுகம்.

பத்திரிகை பெயருக்கு ஏற்ற மாதிரி  அதாவது முன்னணி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பெரிய பத்திரிகையாளர்கள் நேரடியாக செல்லாமல் டுபாக்கூர் பத்திரிகையாளர்களை அனுப்பி அவர்கள் பெயரைச் சொல்லி பணம் பெற்று வருகின்றனர். அது தவிர பெரும்பாலான tasmac மதுபாரில் 10 மணிக்கு மேல்  இவர்கள் ஓசியில் மது கேட்டு குடித்து வருவதாகவும் புகார் சொல்லப்படுகிறது.  அது தவிர அந்தப் பகுதியில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான எல்லா விஷயங்களிலும் பத்திரிகையாளர்கள் மூக்கை நுழைத்து பணம் சம்பாதித்து வருகின்றனர்.வாங்கிய பணத்திற்கு அமைதியாய் ஒதுங்கி செல்லாமல் வேறு ஒருவர்  மூலம் செய்தி போட வைப்பது இன்னும் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவது போன்ற வேளையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தான் கோபப்பட்ட சமூக விரோத கும்பல் இவர்களை விட்டு வைக்க கூடாது என்ற எண்ணத்தில்  கூலிப்படையை ஏவி கொடூரமாக 62 இடங்களில் வெட்டியுள்ளனர்.

எழுதப்படிக்கத் தெரியாத சிலர் மாத இதழ்கள் வார இதழ்கள் என்று ஒரு பத்து புத்தகங்களை அச்சடித்துக்கொண்டு அரசு அலுவலகங்களிடம் சென்று இந்த புத்தகங்களை கொடுத்து பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்கள் அதிகமாக இருக்கிற இந்த நேரத்தில் வெறும் செய்திகளையும் புத்தகத்தின் முகப்பு அட்டை மட்டும் வடிவமைத்து விட்டு அதை சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கி அதில்  அரசு அதிகாரிகள் பெயர்களை அந்த அந்த வாட்ஸ் அப் குழுவில் இணைத்துவிட்டு  அந்த குழுவில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய செய்திகளை அந்த குழுவில் பகிர்ந்து அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த டுபாக்கூர் பத்திரிகையாளர்கள்  இது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் சில நேர்மையான பத்திரிகையாளர்கள்.

டுபாக்கூர் பத்திரிகையாளர்களின் பெயரும் அவர்களின் செல் போன் நம்பரும்.

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் news7tamil  தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சம்பளம் இல்லாமல் பணியாற்றுவதால் கிம்பளத்தை நம்பியும் சமூக விரோதிகளை மிரட்டியுமே பணம் சம்பாதித்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் சில பத்திரிகையாளர்கள்.

திருப்பூரில் இது தொடர்பாக டாஸ்மாக் மதுபான ஊழியர்கள் சங்க (CITU) கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் கலெக்டர் மற்றும் தங்களது உயர் அதிகாரிகளிடம் எந்தெந்த பத்திரிகைகள் பெயர் சொல்லி அந்த பத்திரிகையின் நிருபர்களின் பெயரையும் செல்போன்களையும் எழுதி புகாராக கொடுத்து தினமும் வந்து பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கின்றனர்.இது தொடர்பாக நாம் கருடன் என்ற டுபாக்கூர் பத்திரிகை நடத்தி வரும் ரமேஷ் என்பவரிடம் பேசிய போது தன்னுடைய பத்திரிகையை 60 ஆண்டு காலமாக வருவதாகவும் தான் அந்த காலத்தில் எஸ்எஸ்எல்சி படித்திருப்பதாகவும் தெரிவித்ததோடு நான் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் நான் வள்ளலாரை வணங்குகிறவன் என்றார் தன்னை பற்றி ஒரு மூத்த செய்தியாளர் தவறான செய்தி ஊடகத்தில் பரப்பி வருவதாகவும் நான் பரோட்டா மாஸ்டராக பணி செய்யவில்லை என்று மறுத்து பேசினார்.

all இந்தியா முழுவதும் வேலை பார்க்கும் டுகாக்கூர்.

சரி நீங்கள் பேப்பர் (NEWS PAPER) என்பதன் விரிவாக்கம் என்ன என்பதை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு அவர் இதையெல்லாம் யார் உங்களை கேட்க சொன்னார்.? நீ எந்த பத்திரிகை  என்று நம்மை கேட்டார். ? மேலும் அவர் அவர்களெல்லாம் பெரிய பத்திரிகையாளர்கள் எங்களை கேவலமாக பார்ப்பார்கள் நாங்கள் தனி அணியாக செயல்படுகிறோம் என்று தெரிவித்தார். நான் கேள்விப்பட்டவரை நேச பிரபு விபச்சாரம் நடத்துபவர்களிடமும் கள்ளச் சந்தையில் மது விற்ப்பவர்களிடமும் மிரட்டி பணம் கேட்டதனால் தான் தகராறு ஏற்பட்டதாக சொல்கிறார்கள் என்று நமக்கு பதில் அளித்தார்.

ஏறக்குறைய தமிழ்நாட்டில் மட்டும் நூற்றுக்கணக்கான போலி பத்திரிகையாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பத்திரிகையை சங்கங்களில் ஒருவர் கூட தமிழகத்தில் முதன்மை இடத்தில் இருக்கும் பத்திரிகையில் பணியாற்றிய  பத்திரிகையாளர்கள் இல்லை. அது தவிர  பத்திரிகைகளில் பணியாற்றி அனுபவம் கூட இல்லாதவர்கள். செய்தி எழுதத் தெரியாதவர்கள் படிக்கத் தெரியாதவர்கள் கைநாட்டுகளாக இருந்து கொண்டு ஒரு ஐடி கார்டை போட்டு வைத்துக்கொண்டு விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு பிராடுத்தனம் செய்து வரும் திருட்டு கூட்டங்களாகவே இருக்கிறது.டுபாக்கூர் ரிப்போர்ட்டர்.

திருப்பூரில் இயங்கி வரும் இந்த ஃபிராடு, டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் மற்றும் அதன் சங்க நிர்வாகிகளை அரசு டுபாக்கூர் மற்றும் போலி பத்திரிகையாளர்களை அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கின்றனர்.  அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தயவு செய்து இனிமேல் நேச பிரபுவுக்கு குரல் கொடுக்க கூடாது.  தற்போது நேச பிரபுவிற்கு குரல் கொடுக்கும்  பெரும்பாலான பத்திரிகையாளர் சங்கங்கள் பிராடு டுபாக்கூர் பத்திரிகையாளர் சங்கங்களே தினமும் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட சில பத்திரிகையாளர் சங்கங்கள் முதல் நாள் நேச பிறவி பின்னணி தெரியாமல் கண்டனம் தெரிவித்தார்களே தவிர அதன் பிறகு சமூக வலைதளங்களில் நேச பிரபு பற்றி உண்மை முகம் தெரிய வந்ததும் முக்கியமான பத்திரிகையாளர் சங்கங்கள் அவர் தாக்கப்பட்டது  குறித்து பேசாமல் தவிர்த்தனர்.  ஆனால் இந்த டுபாக்கூர் சங்கங்கள் நமக்கு பெரிய இழப்பு ஏற்படும் நம்மையும் அடிப்பார்கள் என்ற பயத்தில் தொடர்ந்து நேச பிரபுவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் டுபாக்கூர் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டன கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.எனவே அரசு  குறைந்தபட்சம் சட்ட திட்டங்களை உருவாக்கி அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளில் இரண்டு ஆண்டுகள்  பணியாற்றி இருக்க வேண்டும் என்கிற அடிப்படையை வைத்து அவர்கள் தான் சங்கத்தில் இணைய வேண்டும் என்ற நிலையை உருவாக்கினால் இந்த டுபாக்கூர்களை எளிதில் ஒழித்து விடலாம்.

இது போன்ற டுபாக்கூர் சங்கங்களாலும் டுபாக்கூர் பத்திரிகையாளர்களும் சில நேர்மையான பத்திரிகையாளர்களின் புகழுக்கும் நேர்மைக்கும் களங்கும் ஏற்படுத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூரில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் பணியாற்றும் தமிழன் என்ற ரிப்போட்டர் செய்யாத பிராடுத்தனங்களே  இல்லை அவர் செய்யாத தொழிலும் இல்லை என்கின்றனர் அங்குள்ள பத்திரிகையாளர்கள்.  கள்ளக்காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைப்பது, அதிகாரிகளை மிரட்டி பணம் வாங்குவது மண், மணல் குவாரிகள் நடத்துபவர்களிடம் சென்று கேமரா எடுத்துக் கொண்டு கேமராவை காட்டி சட்டத்திற்காக புறம்பாக நீங்கள் மண்ணெடுக்கிறீர்கள் என்று மிரட்டி பணம் கேட்பது, மதுவிலக்கு காவல்துறையினிடம் மாதம் கட்டிங் வாங்குவது, தாசில்தார் அலுவலகம் பிடிஒ அலுவலகம் எல்லா அதிகாரிகளையும் மிரட்டி பணம் வாங்குவதையே தொழிலாக வைத்திருப்பார் என்கின்றனர்.அவர் மீது ஏற்கனவே திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் ஜூனியர் விகடன் பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் அவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.  பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாறன் என்ற ரிப்போட்டரை அடித்த  சம்பவத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

 

திருவள்ளூர் நியூஸ்7 ரிப்போர்ட்டர் தமிழன்.

அப்போது அதிகாரிகளை மிரட்டி டுபாக்கூர்களை வைத்து செய்தி போட வைக்கும் ஒரு ரிப்போட்டர் டிஎஸ்பி துரைப்பாண்டியன் என்பவரிடம் கெஞ்சி பேசி அடி வாங்கிய ரிப்போட்டர் மாறன் காலில் நியூஸ் 7 ரிப்போட்டர் தமிழன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் அந்த புகார் வாபஸ் பெறபெபட்டது.  ஆனால் ஜூனியர் விகடன் ரிப்போட்டர் தாக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.அதே போலவே ஆவடி, அம்பத்தூர்,  திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் நியூஸ் 7 பத்திரிகையாளர்கள் மிரட்டி பணம் சம்பாதிப்பதிலேயே தங்கள் காலத்தை தள்ளி வருகின்றனர்.

#News 7 நிர்வாகம் பத்திரிகையாளர்களுக்கும் அலுவலக  ஊழியர்களுக்கும்  ஒழுங்காக சம்பளம் வழங்கினால் இது போன்ற மற்ற  இடத்தில் கை நீட்டி பிச்சை கேட்கும் நிலை ஏற்படாமல் தடுக்கலாம். சம்பளம் வழங்கியும் பிச்சை எடுக்கும் பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள் அவர்களது கையை இது போன்ற சமூக விரோத கும்பல் வெட்டத்தான் செய்யும்.

இதையும் படிங்க.!