chennireporters.com

ஆசிரியர் பெருமக்களை போற்றுவோம். செப்டம்பர்-5 ஆசிரியர் தினம்.

மாணவர்களின் கல்வி அறிவையும் சமூக ஒழுக்கங்களையும் வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளவிட முடியாதது. செப்டம்பர் -5 ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.  நாட்டின் 2-வது ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ம் ஆண்டு செப்டம்பர் 05ம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் விதத்தில் செப்டம்பர் 05ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.1923-ல் இந்திய தத்துவம் என்ற இவரது நூல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார்.

இவரைப் பார்த்து நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன் என்றாராம் காந்தி. அனைவருக்கும் ஆசிரியர் போன்றவர் ராதாகிருஷ்ணனிடம் கற்க ஏராளமான விஷயங்கள் உள்ளன என்று நேரு புகழ்ந்துள்ளார்.நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவராக 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது 1954-ல் வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் தனது 87-வது வயதில் (1975) மறைந்தார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸடாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் ஆசிரியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!