சசிகலாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு.வரும் அக்டோபர் 16ம் தேதி ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிடம் செல்ல சசிகலா திட்டமிட்டுள்ளார்.
அதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு சசிகலா சார்பில் சென்னை அசோக்நகரை சேர்ந்த முன்னாள் அதிமுக கழக தென் சென்னை மாவட்ட இணை செயலாளர் வைத்தியநாதன் என்பவர்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு
கேட்டு மனு அளித்துள்ளார்.
அதே போல அக்டோபர் 17ம் தேதி தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்குச் சசிகலா செல்ல இருப்பதாக தனியாக மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.அந்த நிகழ்விற்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு தியாகராய நகர் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று அந்தமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அனுமதி வழங்கி போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படும் என்று சசிகலா தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சசிகலா தீவிர அரசியலுக்கு வந்த பிறகுதான் அதிமுகவின் நிலை என்ன என்பது தெரியவரும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.