chennireporters.com

பலத்த காற்று பாம்பன் பாலத்தில் மோதிய படகுகள்.

பலத்த சூறாவளி காற்று காரணமாக பாம்பன் பாலத்தில் படகுகள் மோதியதில் படகுகள் பலத்த சேதமடைந்தது இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

வங்க கடலில் உருவான புயல் எதிரொலியாக ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் காணப்படுகிறது.

இதனால் தனுஷ்கோடி செல்லும் சாலைகளில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன பாம்பன் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.சில இடங்களில் கடல் உள்வாங்கிய நிலையில் பாம்பன் பாலத்தின் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பாம்பன் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி விசைப் படகுகள் நங்கூரம் கயிறு அறுந்து பாம்பன் தூக்கு பாலத்தில் மோதியது மின் கம்பங்கள் மரங்கள் முறிந்து விழுந்தது இதனால் படகுகள் கடும் சேதமடைந்தது.

இதையும் படிங்க.!