chennireporters.com

தி நகரில் மாமூல் கேட்கும் உபிக்கள் மீது நடவடிக்கை எடுங்கள். உதயநிதிக்கு கடிதம் எழுதிய பெண்.

சென்னை தி.நகரில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் திமுக வட்ட செயலாளர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் ஒருவர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு புகார் கடிதம்  எழுதியுள்ளார்.அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது நான் துக்ககை அம்மாள் மகாலட்சுமி நகர் தி நகர் பகுதியில் வசிக்கிறேன். தி. நகரில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கே ஏழுமலை மாநகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் 133 வது வட்ட செயலாளர் மாறி ஆகியோரை ஆகியோரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் அடாவடியாக வியாபாரிகளை மிரட்டி மாமுல் பெற்று வருகின்றனர். சென்னை தி நகர் மேற்கு பகுதியில் 133 வது வட்டத்தின் சுமார் 134 தள்ளுவண்டி கடைகள் உள்ளன, சாப்பாடு கடைகள் உள்ளன மற்றும் சிறு கடை முதல் பெரிய கடைகள் என ஆயிரம் கடைகள் உள்ளன. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த பகுதியில் தொழில் மிகுந்த பகுதியாக விளங்கி வருகிறது.இந்த பகுதியில் சென்னை தென்மேற்கு மாவட்டம் மேற்கு பகுதி செயலாளர் உள்ள சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஏழுமலை மற்றும் தி.நகர் மேற்கு பகுதி 13 வது வட்ட செயலாளராக உள்ள மாரி ஆகியோர் வியாபாரிகளை அடாவடியாக மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மாரி என்பவர் அடாவடி வசூல் செய்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியதால் கட்சியிலிருந்து கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.ஆனால் அவரை வைத்து வசூல் வேட்டையில் ஈடுபட வைப்பதற்கான சென்னை தி நகர் மேற்கு பகுதி செயலாளர் உள்ள மாமன்ற உறுப்பினர் ஏழுமலை அவர்கள் தீவிர முயற்சியால் மீண்டும் கழகத்தில் இணைக்கப்பட்ட 133-வது வட்ட செயலாளர் பொறுப்பை தந்துள்ளார்கள்.

எனவே வசூல் வேட்டையில் ருசி கண்ட அவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து மீண்டும் மாமுல் வேட்டையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பெரிய அளவில் மாதந்தோறும் பெரும் தொகையை வசூல் செய்து வருகின்றனர். மேற்படி நபர்கள் இருவரும் அராஜகம் செய்து கொண்டு நாளுக்கு நாள் அவர்களின் போக்கு அதிகரித்து வருகிறது தொடர்ந்து தி.நகர் மற்றும் உஸ்மான் ரோடு கடைகளிலும் தள்ளுவண்டி கடைகளிலும் வணிகர்களிடம் வசூல் வேட்டை செய்வதுடன் சாலையோரங்களில் ஆக்கிரமித்து ரவுடிகளை வைத்து பணம் வசூலிக்கிறார்கள்.மாதம் சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை வசூல் செய்து அவர்களின் பங்கிட்டு கொள்கின்றனர். எதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரோ மீண்டும் கழகத்தில்  சேர்ந்த பின் தொடர்ந்து அதே செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார். மாரி மற்றும் ஏழுமலை இருவரும் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே மாமுல் கொடுக்க மறுக்கும்  வியாபாரிகளையும் தள்ளுவண்டி வியாபாரிகளையும் நடைபாதை வியாபாரிகளையும் தகாத வார்த்தைகளால்  பேசுவது மட்டும் இல்லாமல் ரவுடிகளை வைத்து அடித்து மாமுல் வசூல் செய்து வருகின்றனர்.இதற்கு கார்ப்பரேஷன் அதிகாரிகளும் மற்றும் காவல்துறையினரும் அவர்களுக்கு உதவியாக உள்ளனர். இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்து செய்து தி.நகர் பகுதி பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகுந்த மனவேதனை ஏற்படுத்தி வருகிறார்கள். கழகத் தலைவர் தளபதி அவர்களின் கழக நல்லாட்சிக்கு குந்தகம் விளைவித்து வருகிறார்கள். எனவே மேற்படி மாறி மற்றும் ஏழுமலை மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வியாபாரிகளையும்,பொதுமக்களையும் மன நிம்மதியுடன் வாழ நீங்கள் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் துக்ககை அம்மாள் எழுதியுள்ளார். இந்த கடிதம் குறித்து இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மேற்படி மாரி மற்றும் ஏழுமலையை நேரில் அழைத்து அவர்களை மீது கட்சியில் இருந்து நீக்கி பொதுமக்களிடம் வசூலித்த மாமுல் பணத்தை திரும்ப ஒப்படைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். துக்ககை அம்மாள் எழுதியிருக்கும் கடிதம் தற்போது தி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த நேரத்திலும் துர்க்கை அம்மாளுக்கு இவர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி இருப்பதாக துக்ககை அம்மாள் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க.!