ஆனாலும் பிரேமலதா புரிந்து கொள்ளமாட்டார்.ஏனென்றால் அவருக்கு அரசியல் புரிபடவில்லை. பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் பதிவு.
உடல் நலமில்லாத கணவனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டதில் பிரேமலதா நல்ல மனைவியாக இருந்திருக்கலாம். ஆனால் அரசியலைப் பொறுத்தவரை அவருடைய குணம் எப்போதோ விதை நெல்லையே பொங்கித் தின்றுவிட்டது.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை தன்நிலை மறந்து, பெரிதாக நினைத்துக் கொண்டு களமிறங்கி கடும் பின்னடைவை சந்தித்தில் எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி சாப்ஃடு வெர்ஷன்..
எம்ஜிஆரை நேரில் பார்க்காதவர்கள் கூட அதிமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகக்கூட ஆனார்கள்.ஆனால் சாதாரண எம்எல்ஏ தேர்தலில் கூட வி.என். ஜானகியால் வெற்றி பெற முடியவில்லை.
தோழியின் கிரீடம் தனக்குத்தான் என ஏக மெதப்பில் களம் இறங்கினார் சசிகலா. இது ஆணவத்தின் வெர்ஷன். இன்று அவரது நிலையை நாடே அறியும்.
இதே வெர்ஷனின் 2.0 தான் பிரேமலதா.ஒருவர் மீதான அரசியல் என்பது வேறு. அபிமானம் என்பது வேறு.மனிதாபிமானத்திற்கு பேர் போன விஜயகாந்த்தே இந்த இரண்டு விளைவுகளையும் மக்களிடம் இருந்தே நேரடி அனுபவம் மூலம் சந்தித்தார்.
உடல் நலமில்லாத கணவனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டதில் பிரேமலதா நல்ல மனைவியாக இருந்திருக்கலாம்.ஆனால் அரசியலைப் பொறுத்தவரை அவருடைய குணம் எப்போதோ விதை நெல்லையே பொங்கித் தின்றுவிட்டது.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை தன்நிலை மறந்து, பெரிதாக நினைத்துக் கொண்டு களமிறங்கி கடும் பின்னடைவை சந்தித்தில் எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி சாப்ஃடு வெர்ஷன்..எம்ஜிஆரை நேரில் பார்க்காதவர்கள் கூட அதிமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகக்கூட ஆனார்கள்.
ஆனால் சாதாரண எம்எல்ஏ தேர்தலில் கூட வி.என். ஜானகியால் வெற்றி பெற முடியவில்லை.
தோழியின் கிரீடம் தனக்குத்தான் என ஏக மெதப்பில் களம் இறங்கினார் சசிகலா. இது ஆணவத்தின் வெர்ஷன். இன்று அவரது நிலையை நாடே அறியும். இதே வெர்ஷனின் 2.0 தான் பிரேமலதா. ஒருவர் மீதான அரசியல் என்பது வேறு. அபிமானம் என்பது வேறு.
மனிதாபிமானத்திற்கு பேர் போன விஜயகாந்த்தே இந்த இரண்டு விளைவுகளையும் மக்களிடம் இருந்தே நேரடி அனுபவம் மூலம் சந்தித்தார்..