chennireporters.com

வழிப்பறி கொள்ளையடித்த போலீசை விரட்டிய முதல்வர்.

nithish
சிறுவன் நிதிஷ்குமார்

 

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ளது சிறுகடல் என்னும் கிராமம்.பாரதியார் 2 வது தெருவில் வசிப்பவர் பாலகிருஷ்ணன்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.தற்போது வேலைஇல்லாமல் வீட்டில் இருக்கிறார்.

கொரோனாவால்வேலை இல்லாமல் பொருளாதாரம் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்.இவருடைய மகன் நிதிஷ்குமார் ஒன்பது வயது ஆர்டிசம் என்னும் நரம்பு பிரச்சினை நோயால் அவரது மகன் மன நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்

.அவருக்கு மருந்து வாங்க சென்றபோது காக்களூர் என்னும் இடத்தில் போலீசார் மகனுக்கு மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை மிரட்டி பறித்துள்ளனர் அது தவிற அசிங்கமாக பேசி மிரட்டி உள்ளனர்.

 

அவர் செய்வதறியாது வீட்டிற்கு வந்து முதல்வரின் டிவிட்டருக்கு செய்தியை அனுப்பி இருக்கிறார்அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அவரே விவரிக்கிறார்.

உடனடியாக உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு பாலகிருஷ்ணன் நன்றி தெரிவிக்கிறார்.கன்னியத்துடன் நடந்து கொள்ள பல அறிவுரைகளையும் உத்தரவுகளை போலீசுக்கு அளித்தாலும் அவர்கள் எப்போதும் தங்களை திருத்திக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு பாலகிருஷ்ணனிடம் மிரட்டி பணம் பறித்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

இதையும் படிங்க.!