Chennai Reporters

நடிகை (சித்தி) மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் 16 கோடி மோசடி வழக்கில் கைது.

 மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ₹16 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தர் சந்திரசேகர்  லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமனம் செய்து கொண்டார். 

மகாலட்சுமி – ரவீந்தர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மகாலட்சுமி – ரவீந்தர் ஜோடி தங்களின் முதலாமாண்டு திருமண நாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொண்டாடியது.இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி பாலாஜி என்பவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் ஆடிப்படையில் மத்திய குற்றபிரிவு போலீசார்  ரவீந்தரை  கைது செய்துள்ளனர். இது போன்று மேலும் அவர் இரண்டு பேரிடம்  ரூபாய் 8 கோடி மோசடி செய்திருப்பதாக போலீஸ்  தெரிவித்தனர். தனது கணவர் கைது செய்யப்பட்டதில் மகாலட்சுமி தனிமையில் தவித்து வருகிறார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!