chennireporters.com

அசத்திய அஸ்வினி மகிழ்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின்.

அஸ்வினி என்கிற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன் பேசி வெளியிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தது.

கோயிலில் அரசு திட்டத்தின் கீழ் உணவளிக்கப்பட்ட போது அதை சாப்பிடவிடாமல் அதிகாரிகள் அவரை விரட்டியதாகவும், அரசு திட்டங்களில் இப்படி செய்யலாமா என்றும், நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்க வில்லை என்றும் அஸ்வினி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

அஸ்வினியின் இந்த வீடியோ முதல்வரின் பார்வைக்கு சென்றது.அதன் பிறகு இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு சம்பந்தப்பட்ட கோயிலுக்குச் சென்று அஸ்வினுடன் சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டு அஸ்வினி உடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் நறிக்குறவர் மற்றும் இருளர் சமுதாயத்தினருக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.சம்மந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் குடியிருப்புக்குள் சென்று அமர்ந்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.

எளிதில் கிடைக்காத பட்டா, சாதி சான்று எல்லாமே எங்களுக்கு முதல்வர் உத்தரவால் கிடைத்தது ரொம்ப நன்றி என்று அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ .4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் –  தமிழ்நாடு முதலமைச்சர் திரு .மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று ( 4.11.2021 ) செங்கல்பட்டு மாவட்டம் , திருக்கழுக்குன்றம் வட்டம் , பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள் , வாக்காளர் அடையாள அட்டைகள் , சாதிச் சான்றிதழ்கள் , நல வாரிய அட்டைகள் , பயிற்சிக்கான ஆணைகள் , வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல் , அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணை ஆகியவற்றையும் வழங்கினார்.

இதையும் படிங்க.!