chennireporters.com

தி.மு.க.வில் இணைய போகிறார் திண்டுக்கல் சீனிவாசன்?

ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்து வைத்துள்ள முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தமிழக அரசு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் தங்கம்,வைரம், வெள்ளி,சொகுசு கார்கள்,551 யூனிட் மணல் என பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் ரெய்டுக்கு பயந்து முன்னாள் வனத்துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சசிகலாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் பலர் சசிகலா வீடு அமைந்துள்ள தி.நகர் ஹபிபுல்லா சாலையில் காத்திருந்தனர்.ஆனால் சீனிவாசன் சந்திக்க வரவில்லை.

இதே நேரத்தில் டெல்லியில் உள்ள பா.ஜ.க முக்கிய பிரமுகர்களிடம் பேசிக்   கொண்டிருப்பதாக சொல்லுகிறார்கள் சீனிவாசனுக்கு நெருக்கமானவர்கள்.

அது தவிர தமிழக முக்கியமான துறையில் உள்ள அமைச்சர் மூலமாக தன்னை திமுகவில் சேர்த்துக்கொள்ள முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு பரவி வருகிறது.தமிழக அரசியலில் திண்டுக்கல் சீனிவாசன் தான் இன்றைய அரசியலின் ஹாட் டாபிக்.

திண்டுக்கல் சீனிவாசன் வணத்துறை அமைச்சராக இருந்த போது முதுமலையில்
யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்றபோது தனது செருப்பை கழற்ற அங்கிருந்த சிறுவனை டேய் தம்பி இங்கே வா இந்த செருப்பில் உள்ள பக்கிலை கழட்டு என்று தன் அதிகாரத்தை காட்டியவர் தான் திண்டுக்கல் சீனிவாசன்.

அந்த வீடியோ மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் தான் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது ரெய்டு க்கு பயந்து ஒதுங்க இடம் தேடி வருகிறாராம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

இதையும் படிங்க.!