chennireporters.com

அரசு மருத்துவமனைகளில் உள்ள மின் தூக்கிகளை அரசு சரி செய்யவேண்டும்.

அரசு மருத்துவமனை மின் தூக்கியில் அமைச்சர் மா.சுப்பிரமணி சிக்கியதால்  மருத்துவமனையில் பதற்றம் நிலவியது.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக அறுவை சிகிச்சை உயர் சிறப்பு மேற்படிப்பு மற்றும் பல்வேறு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை இன்று 29ம் தேதி செவ்வாய் கிழமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டு விட்டு மூன்றாவது தளத்திலிருந்து தரை தளத்திற்கு செல்ல அங்கு உள்ள மின் தூக்கியில் அமைச்சர் மற்றும் டாக்டர்கள் ஏறினார்கள்.

அப்போது திடீரென்று நடுவழியில்  மின் தூக்கி பழுதாகி நின்றது.  இதனால் மின9ஃ தூக்கியில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் டாக்டர்கள் சிக்கிக்கொண்டனர்.  உடனடியாக டாக்டர்கள் அலுவலக அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தகவல் சொல்லி மின் தூக்கி பணியாளரை வரச் சொல்லி சரி செய்ய சொன்னார்கள். ஆனால் சிறிது நேரம் ஆனதால் மின் தூக்கி பழுதை  பிறகு சரி செய்து கொள்ளலாம் .அவசர வழியை திறக்கச் சொல்லுங்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து அவசர வழியை திறந்து அமைச்சர் மற்றும் டாக்டர்களை மின் தூக்கி பணியாளர் வெளியே வர வைத்தார்.  இதனால் மருத்துவமனையில் அரை மணி நேரத்திற்குக்கு மேலாக அனைத்து பணிகளும் பாதியில் நின்றது . மருத்துவமனையும் பரபரப்பாக காணப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி பரவியது.

இது குறித்து பொதுமக்கள் நோயாளிகளை சென்று பார்ப்பதில் சிரமம் உள்ளது. அதனால் மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் கழிவறைகள் மின் தூக்கி போன்றவற்றை அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.  குறிப்பாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனைகளில் உள்ள கழிவறை மற்றும் மின் தூக்கிகளை சரி செய்து தர வேண்டும் என்கிற கோரிக்கையை நெட்டிசன்கள் கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்.

எனவே அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன.

இதையும் படிங்க.!