chennireporters.com

அசைக்க முடியாத தலைவனை ஓங்கி அடித்து வெற்றி வாகை சூடிய ரேவந்ரெட்டி..

தன்னை யார் என்று இந்த உலகத்திற்கு தனது திறமையால் வெற்றி வாகை சூடி வீழ்த்த முடியாத வேங்கையை ஒரே அடியில் ஓங்கி அடித்து முதலமைச்சர் பதவியை அலங்கரிக்கப்போகிறார் இந்த இளைஞன்.பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் மகபூப்நகர் மாவட்டத்தில் 1969-ஆம் ஆண்டு பிறந்த அனுமுலா ரேவந்த் ரெட்டி, மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் துவங்கினார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரெட்டி, அப்போது ஏ.பி.வி.பி.யில் இணைந்திருந்தார். பின்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக, 2009-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கோடங்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்றார். 2014-ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின் 2017-ஆம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். இருப்பினும், 2018 தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்ததால் காங்கிரஸில் சேந்தது அவருக்குப் பெரிதாகப் பலனளிக்கவில்லை. ஆட்சி முடிவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே சட்டசபையை கலைத்து தேர்தலை நடத்திவிட்டார் கே.சி.ஆர்.சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, 2019 மக்களவைத் தேர்தலில் மல்காஜ்கிரியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. அதில் அவர் 10,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021-ஆம் ஆண்டில், காங்கிரஸ் அவரை மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுத்து, மிகப்பெரும் பொறுப்பைக் கொடுத்தது.

இந்தத் தேர்தலில், காமாரெட்டி தொகுதியில் அவர் தற்போதைய முதல்வர் கே.சி.ஆரை எதிர்த்துப் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது தொண்டர்களிடையே அவர் மிகப்பிரபலமாக இருந்தார். பிரசாரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அவரோடு இருந்தனர்.

இந்நிலையில் அடுத்த தெலுங்கானா முதல்வராக அவரது பெயர் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்டியின் சுவரொட்டிகளில் அவர் தெலுங்கானா காங்கிரஸின் ‘ஜோதியை முன்னெடுத்துச் செல்பவர்’ என்று வர்ணிக்கப்படுகிறார்.

தான் 20 ஆண்டுகளாக அரசியலில் இருந்து  வருவதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் இருந்ததால், பொதுமக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு மக்களின் மனங்களை புரிந்து கொண்டு வருவதாகவும் கூறினார். மூன்று மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தாலும் தெலுங்கானாவில் வீழ்ச்சி அடைந்தது அதன் வளர்ச்சியை இன்னும் கூட மக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.

 

இதையும் படிங்க.!