chennireporters.com

செந்தில் தொண்டமான் கோரிக்கை இந்திய மீனவர்கள் 56 பேர் விடுதலை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தொடர் முயர்சியால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உபதலைவரும் முன்னாள் முதலமைச்சருமான செந்தில் தொண்டமான், இலங்கை கடல்பகுதியில் எல்லை மீறி மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலம் விடும்.

திட்டத்தை இலங்கை அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் இரண்டு நாடுகளுக்குள் இருக்கும் நட்புறவில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது .

என்ற காரணத்திற்காக, இலங்கையில் உள்ள மீன்வள அமைச்சர் உடனடியாக படகு ஏலம் விடும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அதை தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த 56 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அவர்களை தமிழகத்திற்கு அனுப்பும் அனைத்து முயறச்சிகளை முன்னெடுக்கபட்டு வருவதாகவும் அவர்களுக்கு உறுதியளித்தார்.

பின்னர்ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல அனைத்து விதமான நடவடிக்கை களை செந்தில் தொண்டமான் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க.!