அதிசயங்களும் ஆச்சரியங்களும் பரபரப்பான விஷயங்களும் கேரளாவில் அடிக்கடி நடப்பதுண்டு சில ஆச்சரிய மூட்டும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்கிற சீரியலில் நடித்துவரும் நேஹகா மேனன் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவருக்கு ஒரு தங்கச்சி பாப்பா பிறந்து இருப்பதாகவும் அது எங்களுக்கு வரம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
நேஹா மேனன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்று நாடகத்தில் நடித்து வருபவர் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி யின் மகள் இனிய வாக நடித்து வருபவர் தான் நேஹா மேனன்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார்.தனது அம்மா கர்ப்பமாக இருப்பதாகவும் தற்போது அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
தான் அக்காவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.அந்த அறிவிப்பிற்கு நெட்டிசன்கள் சிலர் நேஹாகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.ஆனால் சிலர் இந்த விஷயத்தை விமர்சிக்கவும் செய்தனர்.
ஏனெனில் நேஹாகாவுக்கும் புதிதாக பிறந்துள்ள தங்கைக்கும் 19 வயது வித்தியாசம்.ஆனால் நேஹா இதுபோன்ற விமர்சனங்களை கண்டு கொள்ளவில்லை.
நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் நேஹா மூன்று மாத குழந்தையான தனது தங்கையுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் மேலும் அதில் இவள் எனது தங்கை இவளுக்கு சாஹிதி என்று பெயர் வைத்துள்ளோம்.
நாங்கள் அவளை சிக்கி, பூந்தி எனவும் கூப்பிடுவோம் நான் பத்தொன்பது வயதை கடந்த பிறகு இக்யூட்டான என் தங்கையின் மூலம் கடவுள் என்னையும் எனது பெற்றோரையும் ஆசீர்வதித்துள்ளார்.
நீங்கள் அவள் மீது பொழிந்த அன்பிற்கும் ஆசீர்வாதங்களுக்கும் நான் முற்றிலும் நன்றியுள்ள வளாக உணர்கிறேன்.
சிக்கு இப்போது எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி ஆகிவிட்டாள் நான் அதிர்ஷ்டசாலி இல்லையா?
யாரும் ஒரே நேரத்தில் அம்மா மற்றும் சகோதரி உணர்வுகளை பெறமாட்டார்கள்.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் இந்த உணர்வு அற்புதமானது சாஹிதி ஒரு வைரத்தைப் போல வைரத்தைப் போல பிரகாசிக்க போகிறாள்.
நாங்கள் அவளை ஒன்றாக வளர்ப்போம்.தோழர்களே!! பெண்கள் மிகவும் வலிமையானவர்கள்.நாம் அன்பினால் பிறந்தவர்கள்.”அன்பு என்றால் அம்மா ” என பதிவிட்டுள்ளார் நேஹாவின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் லைக் செய்து வருகின்றனர்.