chennireporters.com

உலக கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்தது இந்திய அணி.

உலக  கிரிகெட் வரலாற்றில்  இந்திய கிரிகெட் அணி உலக சாதனை படைத்தது. இலங்கை மற்றும்  இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கௌரவமான வெற்றியை கூட பெற முடியாமல் இலங்கை அணி அவமானத்தில் வெட்கி தலைகுனிந்த்து.  

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி இலங்கை எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று உலக சாதனை படைத்தது.இன்று இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை கேப்டன் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார்.  இந்திய அணியில் மாற்றங்கள் எதும் செய்யப்படவில்லை. இலங்கை தரப்பில் தன்ஞ்செய டி சில்வா நீக்கப்பட்டு ஹேமந்தி புதிதாக  சேர்க்கப்பட்டார்.இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த முறை ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் நான்கு ரன்கள் எடுத்து ஆட்டம் இழத்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பான அடித்தளத்தை உருவாக்கினார்கள். இந்திய அணியை வெற்றிப்பதைக்கு அழைத்து சென்றனர்.கில் சதத்தை நெருங்கிய நேரத்தில் 92 ரன்களில் ஆட்டம் இழந்தார். விராட் கோலி 88 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து சதத்தை தவறவிட்டார்.இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 189 ன்கள் சேர்த்தது. அதற்கு அடுத்து வந்த கே.எல். ராகுல் 21 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 12 ரன்கள்  ஆட்டமிழந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும் என நினைத்த நிலையில்  ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடி 56 பந்தில் 82 ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார். இவரும் சதத்தை தவறவிட்டு ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கடைசிக் கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 34.ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.இதற்கு அடுத்து  பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணி வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் வகையில் பந்துவீசிய இந்திய அணிக்கு பும்ரா முதல் பந்தியிலேயே நிசாக விக்கெட்டை கைப்பற்றினார்.  இதற்கு அடுத்த இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் கருணரத்னே விக்கெட்டை முகமது சிராஜ்கைப்பற்றினார் அதே ஓவரின் நான்காவது பந்தில்  பிரவீன் விக்ரமா விக்கெட்டையும் கைப்பற்யினார்.ஆட்டத்தின் முடிவில் 55 ரன்களில் இலங்கை ஆல் அவுட் ஆக இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் முகமது சமி ஐந்து ஓவர்களில் 18 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகளை  கைப்பற்றினார்.முகமது சிராஜ் 7 ஓவர்களில் 16 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். பும்ரா ஐந்து ஓவர்களுக்கு 8 ரன் தந்து ஒரு விக்கெட் பற்றினார்.  இந்திய அணி இன்று பெற்ற  வெற்றி சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது பெரிய ரன் வித்தியாசமாகும். இதே உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உலக சாதனையாக இருந்து வருகிறது.இந்திய அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகள் உடன் முதல் இடத்தை மீண்டும் புள்ளி பட்டியலில் கைப்பற்றி இருக்கிறது. மேலும் இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணியின் ரன் ரேட் +2க்கு வந்திருக்கிறது. மேலும் இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்று இருக்கிறது இந்திய ஆணி.

இதையும் படிங்க.!