சென்னை பூந்தமல்லி நகராட்சி முழுவதும் மூன்று சீட்டு லாட்டரி, கஞ்சா, விபச்சாரம் என திரும்பிய பக்கமெல்லாம் சட்டத்திற்கு புறம்பான அனைத்து பிசினஸ்களும் கொடி கட்டி பறக்கிறது. மாதம் மாமலுக்காக சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்க விட்டு கல்லா கட்டி வருகிறது பூந்தமல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் மௌனம் காப்பதற்கு காரணம் என்ன என்பது புரியாத புதிராக இருக்கிறது.
ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர்
குடிமகன்களை மிரட்டி , மடக்கி அடிப்பது ஆட்டோக்காரர்கள் மீது பொய் கேஸ் போடுவது ஏமாளி தலையில் மிளகாய் அரைப்பது இது போன்ற வேலைகளை செய்து கொண்டு மலை முழுங்கி மாடுகளை வியாபாரம் செய்ய சொல்லி கைகட்டி வேடிக்கை பார்க்கிறது திராவிட மாடல் ஆட்சியின் காக்கி சட்டை கைக்கூலிகள்.
பூந்தமல்லியில் உள்ள உடன்பிறப்புக்களான குட்டி, பழனி, செந்தில்குமார், பூந்தமல்லி நகராட்சி சேர்மன் காஞ்சனாவின் கணவர் சுதாகர், மாங்காடு சீனிவாசன் என பல முக்கிய புள்ளிகள் சின்டிகேட் அமைத்து கொண்டு சட்டத்திற்கு புறம்பான அனைத்து பிசினஸ்களையும் நடத்தி வருகின்றனர்.
அதாவது பூந்தமல்லி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 3 சீட்டு லாட்டரி குமணன் சாவடி பூஞ்சோலை தெரு, பிவெல் ஹாஸ்பிடல் எதிரில் உள்ள கவரை தெரு, பூந்தமல்லி பைபாஸ் சாலையில் உள்ள பழைய பாலமுருகன் சினிமா தியேட்டரில் 3 சீட்டு லாட்டரி வியாபாரம் களை கட்டி நடந்து வருகிறது. பணம் எண்ணுவதற்கு நேரம் இல்லாமல் படு பிஸியாக நம்பர்களைஎழுதி வருகின்றனர் ஊழியர்கள். ஏழை கூலி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து மூன்று நம்பர் லாட்டரிக்கு நம்பர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள். பல தின கூலி தொழிலாளர்கள் வருமானத்தை இந்த மூணு சீட்டு லாட்டரியில் பணம் கட்டி ஏமாந்து டாஸ்மாக் பாரில் குடித்து போதையில் விழுந்து கிடக்கிறார்கள் என்று சிஐடியுவை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் நமது அலுவலகத்திற்கு புகார் அளித்தனர்.
பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஜவஹர்.
அந்த புகாரியின் அடிப்படையில் நாம் நேரில் சென்று வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்து நடந்த சம்பவம் பற்றி இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டு இருந்தோம் . ஆனால் இதுவரை ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் யாரும் மேற்படி மூன்று சீட்டு லாட்டரி நடத்தும் திமுக விஐபிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவர்கள் காவல்துறையினருக்கு தரும் மாமலுக்காக சட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்படாமல் அமைதி காத்து வருகின்றனர் என்கின்றனர் பாஜகவை சேர்ந்த சில நிர்வாகிகள் பூந்தமல்லியில் சட்டம் ஒழுங்கு சந்தை சிரிக்கிறது என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.
இந்த மூன்று சீட்டு லாட்டரி வியாபாரம் கள்ளச் சந்தையில் மது விற்பனை காட்டுப்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஹைடெக் அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சின்ன போரூர், ஐயப்பன்தாங்கல் மாங்காடு, குன்றத்தூர் போன்ற பகுதிகளிலும் இந்த வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது என்கின்றனர் ஆட்டோ டிரைவர்கள்.
ஏவிகே லாட்டரி, ஏவிகே பூட்டான், ஏவிகே டியர் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த மூன்று சீட்டு லாட்டரி வியாபாரத்தில் நாளொன்றுக்கு 20 லட்சம் வரை உடன் பிறப்புக்கள் கல்லா கட்டி வருகின்றனராம்.
பூந்தமல்லியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் லஞ்ச பணம் குறித்து யார் யாருக்கு எந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு தரப்படுகிறது என்கிற விபரத்தை நாம் குறிப்பிட்டு இருந்தோம் .
பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு அதாவது இன்ஸ்பெக்டருக்கு 25 ஆயிரம் சப் இன்ஸ்பெக்டருக்கு 10,000 உளவுத்துறை ஏட்டுக்கு ஐந்தாயிரம் பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் (ஏசிக்கு) 40,000 டிசி க்கு 50000 ம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு பெரிய தொகை மாதம் லஞ்சமாக இல்லாமல் மாமூலாக இல்லாமல் கை செலவுக்காக வழங்கி வருகின்றனர் மூன்று சீட்டு நடத்தும் திமுக விஐபிகள்.
இந்த செய்தியை படித்துவிட்டு நமக்கு தொலைபேசி மூலம் தகவல் சொன்ன ஒரு ஆளுங்கட்சி திமுக விஐபி ஒருவர் சார் லஞ்ச பணத்தை குறைவாக நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள் நீங்கள் உங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ள பணத்தின் அளவை விட அதிகமாக தான் கொடுத்து வருகின்றனர் இந்த கொள்ளை கும்பல் என்று சொன்னார்.
பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஜவஹர்
பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஜவஹர் மட்டும் இதில் நல்ல லாபம் பார்த்து வருகிறார் . என்று சொல்கின்றனர் காவல்துறையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சில உளவுத்துறை அதிகாரிகள்.
எல்லா அதிகாரிகளையும் சரி கட்டித் தான் இந்த வியாபாரம் நடத்தப்பட்டு வருகிறது இந்த வியாபாரத்திற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் கண்டனம் தெரிவித்தாலும் அவர்கள் நிலைமை மிக மோசமாகிவிடும் நீங்கள் கவனமாக இருங்கள் என்ற தகவலும் நமக்கு சொல்லப்பட்டது.
திருவள்ளூர் கலெக்டரையே கதற விட்டவர் எங்கள் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி அண்ணன். காக்கிகள் எங்களுக்கு காவல் காப்பது மட்டும்தான் அவர்களின் கடமை. சட்டம் ஒழுங்கை பற்றி அவர்கள் எதுவும் பேசாமல் இருக்க அவர்களுக்கு மாதம் மாமுல் கொடுத்து வருகிறோம். எனவே நீங்கள் லாட்டரி யில் பணம் கட்டி ஏமாந்து போகும் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், கொத்தனார் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட்டு அவர்களுக்கு ஆதரவாக செய்தி எழுத கூடாது நீங்கள் உங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது என்று நமக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை கலந்த தகவல் நமக்கு சொல்லப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட வியாபாரம் தொழில் செய்து வரும் ஃபிராடு நபர்கள் தரும் பணத்திற்காக ஏழை மக்களின் வாழ்வில் மண்ணள்ளிப் போடுவதை ரசித்துப் பார்க்கிறது பூந்தமல்லி காவல்துறை. அரசு அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்றினால் சமூகத்தில் எந்த ஒரு தவறான சம்பவங்கள் ஏதும் நடக்காது.