chennireporters.com

வாழ்த்து பிச்சை எடுக்க சொன்னது யார்? அண்ணாமலையா இல்லை பாஜக பிரமுகரா?உண்மையை சொல்வாரா அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் ஜூலை 4-ஆம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டது தமிழகம் முழுவதிலுமிருந்து அவரது கட்சியினர் அவருக்கு நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

அதற்கு முன்னதாக சென்னை அடையாரை சேர்ந்த ஒரு பிரமுகர்,தொழிலதிபர் ஒருவரிடம் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க சொல்லி கெஞ்சும் ஆடியோ வெளியாகி உள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோன்ற அசிங்கம் நடந்ததாக இல்லை என்கின்றனர் சில மூத்த அரசியல்வாதிகள் இந்த ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த ஆடியோ வாசகர்களுக்கு உங்களுக்கு அப்படியே நாம் தருகிறோம். அண்ணாமலையும் சர்ச்சையும் ஒருசேர இருக்கிறது.

அடையார் சீனிவாசன்

அண்ணாமலைக்கு தற்போது ஏழரை நாட்டு சனி நடப்பதாக சொல்லுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் சில தினங்களுக்கு முன்பு தான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் ஒருமையில் பேசினார்.

ஆனால் அண்ணாமலை எந்த பத்திரிகையாளர்களை அவமதித்து பேசினாரோ அதே பத்திரிகையாளர்களுக்கு காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி ஆண்ட்ராய்ட் செல்போன்களை முக்கிய பிரமுகர்களுக்கு வாங்கி தந்துள்ளார்.

அண்ணாமலையை கண்டனம் தெரிவித்து பேசிய பத்திரிகையாளர்களை தனது கட்சி பிரமுகர்களிடம் சொல்லி மீண்டும் போட வைத்திருக்கிறார் அண்ணாமலை.

தான் வாழவேண்டும் என்பதற்காகவும் தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எதையும் செய்யத் துணிந்தவர் தான் அண்ணாமலை என்கிறார்கள் கே. டி.ராகவன் தரப்பினர் பத்திரிகையாளர்கள் இல்லை யென்றால் அண்ணாமலையால் தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது.

பத்திரிகையாளர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் அண்ணாமலை சில்லரை தான் என்கின்றனர் கே. டி. ராகவன் தரப்பினர் விரைவில் அண்ணாமலைக்கு மிகப்பெரிய கண்டம் இருப்பதாக ஆருடம் சொல்கிறார்கள் ராகவன் தரப்பினர்.

இதையும் படிங்க.!