chennireporters.com

ஓசியில் மட்டன் பிரியாணி கேட்கும் பெண் போலீஸ் ஏட்டு.

நீதி மன்றத்திற்கு வருபவர்களிடம் மட்டன் பிரியாணி கேட்கும் பெண் தலைமை காவலரால் திருவள்ளூர் மாவட்டமே கதிகலங்கி நிற்கிறது.  திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் விஜயலட்சுமி.

இவர் நீதிமன்ற பணிகளை கவனித்து வருகிறார்.  இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் பொதுமக்கள்.  மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது நீதிமன்றத்திற்கு போகும்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள், புகார் கொடுத்தவர்கள், என  இரண்டு தரப்பிலும் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விஜயலட்சுமி 500 ரூபாய் பணம் கட்டிங் கேட்பது வழக்கம்.

அது தவிர மட்டன் பிரியாணி, மாதுளை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், தவிர இளநீர் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் கண்டிப்பாக வாங்கி தரும்படி கட்டாயப்படுத்துவாராம். வாங்கி தராதவர்களை ஆபாசமாக திட்டி அவர்களை மிரட்டுவது ஏட்டு விஜயலட்சுமியின் வழக்கம்.

விஜயலட்சுமி திருத்தணி பகுதியை சார்ந்தவர்.  அவரது கணவர் பாலாஜி வாட்டர் சர்வீஸ் நடத்தி வருகிறார்.  அவர்களுக்கு பூர்வீகத் தொழில் வட்டிக்கு விடுவது தான். விஜயலட்சுமி பொதுமக்களை மிரட்டி வாங்கும் லஞ்சப் பணம் எல்லாம் தனது கணவர் மூலம்தான் வட்டிக்கு விடுவாராம். இப்படி ஏட்டம்மாவின் சொத்து மதிப்பு பல லட்சமாம்.

குறிப்பாக போஸ்கோ வழக்கு, பெண்கள் அடிதடி வழக்கு, என எந்த வழக்குகள் ஆனாலும் நீதிமன்றத்திற்கு வரும்போது விஜயலட்சுமிக்கு 500 ரூபாய் கட்டிங் தரவில்லை என்றால் நீதிமன்ற பணிகள் எதுவும் நடக்காது நாளைக்கு வா, வாய்தா போட்டுவிட்டார்கள் என்று இவர் பல வாய்தா போடுவாராம்.

குறிப்பாக போஸ்கோ வழக்கில் புகார் சொன்ன பெண் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும் போதோ அல்லது பிறழ் சாட்சியாக மாறும்பொழுது நீ ஏன் மறைக்கிறாய் நட்ட ஈடு  கேள்  குறைந்தது10 லட்சம் 20 லட்சம் கேள்வி என்று அவர்களை தூண்டி  விடுவாராம்.

மறுத்தால் அவர்களை இழிவாக பேசி மிரட்டுவாராம்.  புகார் கொடுத்தவரிடமும் பணம் வாங்குவாராம்,  பாதிக்கப்பட்டவரிடமும் பணம் வாங்குவாராம் விஜயலட்சுமி.

 

விஜயலட்சுமியின் நிலைமையே இப்படி என்றால் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கார்த்திகா , சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுகந்தியின் நிலைமை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் அவர்களின் மாத கட்டிங் வருமானமே பல லட்சங்களை தாண்டும் என்கிறார்கள் சில ஆண் காவலர்கள்.

இதையும் படிங்க.!