chennireporters.com

ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் என்ன? இதோ புதிய தகவல்கள்.

வளர்ந்து வரும் அறிவியல் உலகத்தை நம் உள்ளங்கையில் கொண்டு வந்து சேர்க்கிறது இந்த ஸ்மார்ட் போன்கள் இந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்கள் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

இப்போதெல்லாம் கையில் போன் இல்லாதவர்களை பார்ப்பதே கஷ்டம்தான். குறிப்பாக ஸ்மார்ட்போன் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழ்கிறது. சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் விலை வரையிலான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப அதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றன.

செல்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை நாம் அது தொடர்பான வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்வோம். ஆனால் நம் செல்போனில் வெளிப்பகுதி குறித்து எந்த அளவுக்கு நமக்கு தெரியும்?

 செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய ஓட்டை ஒன்றை கவனித்து இருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா? சிலருக்கு தெரிந்திருந்தாலும் பெரும்பாலனவர்களுக்கு அதற்கான விடை தெரியாது.

செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய ஓட்டை ஒன்றை கவனித்து இருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா? சிலருக்கு தெரிந்திருந்தாலும் பெரும்பாலனவர்களுக்கு அதற்கான விடை தெரியாது.

 அந்த மிகச்சிறிய துளை நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோபோன் ஆகும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நாம் செல்போனில் பேசும் போது செயல்படும் மைக்ரோஃபோன் அதுதான். நாம் யாரையாவது செல்போனில் அழைக்கும் போது, இந்த மைக்ரோஃபோன் இயக்கப்படும். அந்த சிறிய துளை சரியாக நம் குரலை பிக்கப் செய்து மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாக கொடுக்கிறது.

அந்த மிகச்சிறிய துளை நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோபோன் ஆகும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நாம் செல்போனில் பேசும் போது செயல்படும் மைக்ரோஃபோன் அதுதான். நாம் யாரையாவது செல்போனில் அழைக்கும் போது, இந்த மைக்ரோஃபோன் இயக்கப்படும். அந்த சிறிய துளை சரியாக நம் குரலை பிக்கப் செய்து மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாக கொடுக்கும் தன்மை கொண்டது.

 அதே நேரத்தில் சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும் இந்த மைக்ரோபோன் அனைத்து வித சத்தங்களையும் உள்வாங்காது. செல்போனில் அடிப்பகுதி என்பதால் இரைச்சலை உள்வாங்குவதில் தடை இருக்கும். அதே நேரத்தில் நாம் பேசும் ஒலி மிகச்சரியாக துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக எதிர்தரப்புக்கு கேட்கும்.

அதே நேரத்தில் சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும் இந்த மைக்ரோபோன் அனைத்து வித சத்தங்களையும் உள்வாங்காது. செல்போனில் அடிப்பகுதி என்பதால் இரைச்சலை உள்வாங்குவதில் தடை இருக்கும். அதே நேரத்தில் நாம் பேசும் ஒலியை மிகச்சரியாக துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக எதிர்தரப்புக்கு கேட்கும்.

வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் செல்போனின்  பயன்பாடுகள் வாழ்வில் பெரிதும் அத்தியாவசியமாக கருதப்படுகிறது.  எனவே செல்போன் எந்த அளவிற்கு மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறதோ அதே அளவிற்கு மனித சமூகத்திற்கு எதிரான பல விஷயங்களையும் செல்போனும் இணையதளமும் கொண்டு  வருகிறது. இது நமது சொந்த பணத்தில் சூனியம் வைத்துக்கொள்வது என்பது. எனவே பொது மக்கள்  செல்போன் பயன்பாட்டை  கவனமாக கையாள வேண்டும் என்பதே இந்த செய்தியின் நோக்கம்.

இதையும் படிங்க.!