திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜன் இவர் தனது பட்டா நிலத்தை அளந்து தர சொல்லி மாவட்ட ஆட்சியருக்கும் திருவள்ளூர் வட்டாட்சியருக்கும் மனு அளித்திருந்தார் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் அதிகாரிகளின் மெத்தன போக்கிற்கு கண்டனமும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் அனுமதி பெறாமல் நூற்று கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இது தொடர்பாக புழல் அடுத்த விளாங்காடு பாக்கத்தை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசின் அனுமதி இல்லாமல் இயங்கும் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டு ஏறக்குறைய ஒரு வருடமாகிறது. இதுவரை புழல் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புழல் பி.டி.ஒ. மணி சேகர்.
நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட ஆட்சியர் மீது மல்லிகா மீரான் மீண்டும் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார்.
பஞ்சாயத்து தலைவர் பாரதி சரவணன்.
அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இருந்ததற்கு ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்த நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தவுடன் மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு கண்டனமும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க சொல்லி உத்தரவிடும் என்கிறார் மல்லிகா மீரான்.
திருவள்ளூர் மாவட்டம்,புழல் ஊராட்சி ஒன்றியம், இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் திருமதி. மல்லிகாமிரான் அவர்கள் கடந்த 04/08/2022 மற்றும் 07/09/2022 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ( ஊராட்சிகள் ), உறுப்பினர் / செயலர் CMDA புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அவர்களுக்கு புகார் மனு அளித்திருந்தார். அதில், விளங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பதி நகர் என்ற பகுதியில் SRI SAI SURVESH POLYMERS என்ற தொழிற்கூடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைகேடாக கட்டப்பட்டுள்ள தொழிற்கூடத்திற்கு பலவகை ரசீது, வீட்டு வரி ரசீது மற்றும் தொழில்வரி ரசீது என அனைத்து வரி ரசீதுகளும் ஊராட்சி மன்றத்தால் கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் CMDA மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.தனது மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கடந்த 12/01/2023 அன்று தீர்ப்பு வரப்பெற்றது அதில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ( ஊராட்சிகள் ), உறுப்பினர் / செயலர் CMDA, புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆகியோர் 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து மேற்கூறிய கட்டிடம் அனுமதி பெறாமல் இருந்தால் எட்டு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வரப்பெற்றது ஆனால் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் அந்த நிறுவனத்தின் மீது எடுக்கப்படவில்லை. மேலும் அனுமதி பெறாத கட்டிடத்திற்கு வரி ரசீதுகள் கொடுத்து அரசுக்கு பல லட்ச ரூபாய் ரூபாய் வருவாய் இழப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பாரதி சரவணன் அவர்கள் மீதும் ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 இன் கீழ் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆதலால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், உறுப்பினர் செயலர் CMDA, திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் புழல் ஊராட்சி ஒன்றிய 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா மீரான் அவர்கள் மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய உள்ளார்
மேலும் இதே ஊராட்சி மன்ற தலைவர் 2012ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராக ஊராட்சி பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதிற்க்காகவும், அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு வரி ரசீதுகள் கொடுத்ததற்காகவும் மற்றும் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு ஊராட்சி மன்ற தலைவரே திட்ட வரைபடத்தில் சீல் போட்டு கையொப்பம் போட்டதால் செக் பவர் கேன்சல் செய்தது குறிப்பிடத்தக்கது.
விளங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் மற்றும் அவரது கணவர் சரவணன் தி. மு. கவின் புழல் ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வருவதால் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள் அதிகாரிகள்.
நீதி மன்ற உத்தரவை செயல் படுத்தாத அதிகாரிகள் மீது கலெக்டர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீதி மன்றத்தின் மான்பை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தில் குட்டு படும் சூழல் ஏற்படும். கலேக்டர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.