chennireporters.com

நட்பிற்கும் நன்றிக்கும் கிடைத்த அமைச்சர் பதவி

nasar
ச.மு.நாசர் எம்.எல்.ஏ ஆவடி

 

ஆவடி தொகுதியில் முதல் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. அந்த சென்டி மென்ட் படி பார்த்தால் அத்தொகுதியில் மூன்றாவது எம்.எல்.ஏவாக வந்திருக்கும் சா.மு.நாசருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஆவடி தொகுதி தி.மு.க.வினர்இடையே இருந்தது.

அதன்படியே சா.மு.நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.பால்வளத்துறை வழங்கப்பட்டிருக்கிறது.தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் ஆவடி தொகுதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வசிக்கும் தொகுதியாக ஆவடி இருக்கிறது.இந்தியாவின் முப்படை தளங்களும் இங்கே தான் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும், மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் அமைந்துள்ளது தான் ஆவடி.பூந்தமல்லி தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த ஆவடி.தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்னர் 2011ல் புதிய தொகுதியாக ஆனது ஆவடி.2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் க.பாண்டியராஜன் 1,08,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தி.மு.க வேட்பாளர் சா.மு.நாசர் 1,06,669 வாக்குகள் பெற்று 1395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.2021 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் மீண்டும் க.பாண்டியராஜனும், திமுக சார்பில் மீண்டும் சா.மு.நாசரும் களமிறங்கினர்.தே.மு.க சார்பில் என்.எம்.சங்கரும், மநீம சார்பில் வி.உதயகுமாரும், நாதக சார்பில் ஜி.விஜயலட்சுமியும் களத்தில் இருந்தனர்.இத்தேர்தலில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டே சா.மு.நாசர் முன்னிலையில் இருந்து வந்தார்.இறுதியில் பாண்டியராஜனை திமுக வேட்பாளர் சா.மு. நாசர் 53,274 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

2016 தேர்தல் வென்ற க.பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.அதனால், ஆவடி தொகுதியின் மூன்றாவது எம்.எல்.ஏ.வாக தேர்வாகியிருக்கும் சா.மு.நாசருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். அதன்படியே அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

ஏறக்குறைய நாற்பதாண்டு கால நட்பின் காரணமாகவே நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தி.மு.க.வில் உள்ள மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஸ்டாலின் இளைஞரணி துவங்கிய காலத்திலிருந்து அவருக்கு நாசர் தோள் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி விசுவாசத்திற்கும் நட்பிற்கும் கிடைத்த பதவி தான் இந்த அமைச்சர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!