.திருவள்ளூர் அருகே பயங்கரம்.
திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் காமேஷ் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் அந்தப் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பகுதியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமை பட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் கோபம் அடைந்த காமேஷ்.கஞ்சா விற்பனை செய்து வந்த அந்தப் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் கமல் என்பவரை காமேஷ் தட்டி கேட்டுள்ளார்.
இந்தப் பகுதியில் நீ கஞ்சா விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.அதுதவிர மப்பேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.அதன்பேரில் கமலின் அப்பா மகாலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கமலின் அப்பா மகாலிங்கம் கைது செய்யப்பட்டதற்கு காமேஷ் தான் காரணம் என்று கோபத்தில் இருந்த கமல் அவரது நண்பர்களை நான்கு பேர் தயார் செய்தார் அவர்கள் மூலம் காமேஷை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
நேற்று இரவு நரசிங்கபுரம் அருகே காமேஷ் சென்றபோது 2 மோட்டார் பைக்குகளில் வந்த நபர்கள் காமேஷை வழிமறித்து சரமாரியாக தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டிக் கொன்றனர்.
அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் காமேஷ் இறந்து போனார் இதுதொடர்பாக மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ஈசன் என்பவர் நம்மிடம் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த கமலுக்கும் காமேஷிற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கஞ்சா விற்பனையை தட்டி கேட்டதால் அதே பகுதியை சேர்ந்த கமல் அவர்களது நண்பர்களை வைத்து காமேஷை கொலை செய்துள்ளார்.உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.தொடர்ந்து இது போன்ற செயல்கள் திருவள்ளூர் பகுதியில் நடைபெற்று நடை பெற்று வருகிறது.ஈக்காடு, திருவள்ளூர், ஏரிக்கரை, மணவாளநகர், பெரியகுப்பம், கடம்பத்தூர், ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.
அது தவிர வெங்கல் மற்றும் தாமரைப்பாக்கம், காரணிப்பேட்டை, பெரியபாளையம், ஆரணி, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, போன்ற பகுதிகளிலும் கஞ்சா விற்பனை படு ஜோராக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.