chennireporters.com

திருப்போரூர் நகரத்தை விற்று கல்லா கட்டும் வருவாய்த்துறை அதிகாரிகள்.

திருப்போரூர் நகரில் உள்ள பிராணவ மலையில் உள்ள இடங்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிராணவ மலையின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு 80 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி  துறைக்கு சொந்தமானது.இந்த இடத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்வது அல்லது மண் கடத்துவதோ குற்றம் ஆகும் . ஆனால் தினம்தோறும் அந்தப் பகுதியில் செம்மண் மற்றும் கற்கள் வெட்டி கடத்தப்படுகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தரவை மீறி பல விஐபிகளுக்கு போலியான நபருக்கு  பட்டா போட்டு வழங்கப்பட்டு வருகிறது.நூற்றுக்கணக்கான தாழிகள் மட்டும் தான் தற்போது உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த மலைப்பகுதி குறும்பர்கள் வாழ்ந்த காலமாக இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். அது தவிர சில சமூக விரோதிகள் இந்த தாழிகளில் தங்கம், வைரம் போன்ற விலை மதிக்க முடியாத நகைகள் இருப்பதாக இரவு நேரங்களில் பழமையான வரலாற்று சிறப்புமிக்க இந்த தாழிகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.மலையில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருபவர்களுக்கு திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக அனுமதி வழங்கி வருகிறது. திருப்போரூர் தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் மத்திய அரசின் உத்தரவை மதிக்காமல் பட்டா வழங்கி வருகிறார்கள். எனவே திருப்போரூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பிராணவ மலையை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். வரலாற்று சிறப்பு மிக்க  பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் துணை போகிறார்கள். இது குறித்து உடனடியாக தொல்பொருள் ஆராய்ச்சி துறை இயக்குனர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் ஆய்வு செய்து உடனடியாக பிராணவ மலையில் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்கின்றனர் அந்தப் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள்.பொது மக்கள் கொட்டகை போட்டு குடி இருக்கின்ற கிராம நத்தம் நிலத்திற்கு பட்டா கேட்டாலே வீடு இருக்கின்றதா? அதில் குடும்பம் நடத்தப்பட்டு வருகின்றதா? கரண்ட்  இருக்கின்றதா? அது இருக்கின்றதா? இது இருக்கின்றதா? என்று சட்டம் பேசுகின்ற வருவாய்த்துறை அதிகாரிகள்,கடந்த 50 ஆண்டுகளாக காலியாகவே இருக்கின்ற ஒரு  இடத்திற்கு எதன் அடிப்படையில் பட்டா போட்டு கொடுத்தார்கள்? முதல் பட்டாதாரராக இருக்கின்ற அந்த காளியம்மாள் யார்? திருப்போரூர் பிராணவமலை சூறையாடப்படுகிறது, அங்கு இருக்கின்ற முதுமக்கள் தாழிகள் அழித்தொழிக்கப்படுகின்றன.தொல்பொருள் துறையின் கீழ் இருக்கின்ற பகுதிகளில் அனுமதி இன்றி வானுயர கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது?

இவையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டியவர்கள் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அதற்கு துணை போகிறார்கள் என்பதுதான் வேதனை. அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் திருப்போரூர் நகர சமூக ஆர்வலர்கள்.

இதையும் படிங்க.!