chennireporters.com

தலித் மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகள்.

சிவசண்முகம் பிள்ளை

படித்ததில் பிடித்தது.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே 1938 ம் வருடம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிவசண்முகமபிள்ளை சென்னை மேயராக பதவி வகித்தார்.

அதனை தொடர்ந்து 1945ம் வருடம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தசிவராஜ் சென்னை மேயராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன் பின்னர் சிவராஜ் 1957-ஆம் ஆண்டு இந்திய குடியரசு கட்சி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேயர் சிவராஜ்

1938,ம் ஆண்டு திமுக என்ற கட்சி ஆரம்பிக்கப்படவே இல்லை.1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தான் திமுக தொடங்கப்பட்டது.

ஆனால் தற்போது திமுகவால்தான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை மேயராகி, அவர்கள் தந்த வாய்ப்பினால்தான் பார்ப்பனர்கள், பட்டியல் சமூக மேயரை மதிக்கப்போகிறார்கள் என்றெல்லாம் அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகள் என்றைக்குத்தான் மாறப்போகிறதோ?

பட்டியல் சமூகத்தினரை பொருத்தவரை அவர்களை அணுகுவதில் பார்ப்பனர்களுக்கும் சூத்திரர்களுக்கும் பெருத்த வேறுபாடில்லை.

பார்ப்பனர்கள் அறிவுத் தளத்தில் ஒடுக்குமுறைகள் செய்கிறார்கள் எனில், சூத்திரர்கள் நேரடியாகவே ரத்தக் களறிகளை விளைவிப்பவர்களாக இருக்கிறார்கள்.

தலித்துகளுக்கு அதிகார பிரதிநிதித்துவம் என்பது, இட ஒதுக்கீடு என்பதெல்லாம் அண்ணல் அம்பேத்கர் வழி கிடைத்த உரிமையாகும்.

ஆனால் அண்ணல் அம்பேத்கரை எந்த இடத்திலும் சுட்டி காட்டாமலேயே திராவிட கட்சிகள் சாதனை என்று பிதற்றுவது வெட்கக்கேடான ஒன்று…

இதையும் படிங்க.!