chennireporters.com

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் சொத்துக்காக பொய் புகார் கொடுத்ததாக கலெக்டரிடம் புகார்.

திருமண கோலத்தில் எடுத்த போட்டோ

திருவள்ளூர் அருகே விவாகரத்து வழக்கிற்காக வந்த பெண்ணிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாண படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதாக பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ப்ரியா என்ற பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ப்ரியா என்பவர் கணவருடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

 

இந்நிலையில் விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் டார்ஜன் என்பவரிடம் அந்த இளம் பெண் அணுகியுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை நிர்வாண புகைப்படங்கள் எடுத்து மிரட்டி யதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ப்ரியா திருவள்ளூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் காவல் ஆய்வாளர் ராஜாமணி வழக்குப் பதிவு செய்து வழக்கறிஞர் டார்ஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து திடீர் திருப்பமாக டார்ஜினின் மகன் ஆகாஷ் மற்றும் அவரது மகள் அவரது உறவினர் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

அந்த புகாரில் தன் தந்தை மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் எங்களிடம் உள்ள சொத்துக்கு ஆசைப்பட்டு  பொய்யான புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளி விட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டார்ஜனின் மகன் ஆகாஷ் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில்…. சொத்துக்காக ஆசைப்பட்டு என் தந்தை மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பேட்டி.

டார்ஜன்  மகன் ஆகாஷ் பேட்டி தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரியாவை நாம் தொடர்பு கொண்டு இது குறித்து கருத்து கேட்டோம்.

அதற்கு பதில் அளித்த பிரியா நான் டார்ஜனாள் கடுமையான மன உளைச்சலுக்கும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.  அந்த புகைப்படங்கள் பொய்யானது நீதிமன்றத்தில் உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும் என் பெயரையோ புகைப்படத்தையோ போடவேண்டாம்.  என் மகன்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகள் கழித்து திடீரென்று டார்ஜன் மீது புகார் கொடுக்க காரணம் என்ன என்று கேட்டதற்கு பதில் சொல்லாத பிரியா தற்போது புகார் கொடுத்துள்ளேன்.

நான் அவனால் ஏமாற்றப்பட்டேன் என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று உறுதியளித்த அவன், எனக்கு எதுவும் செய்யவில்லை.

பலமுறை குடித்துவிட்டு வந்து என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொந்தரவு செய்து இருக்கிறார்.   என்னை அடித்து  இருக்கிறார் என்று தெரிவித்தார் .

கடம்பத்தூரில் உள்ள சொத்துக்காக தான் நீங்கள் பொய் புகார் கொடுத்ததாக டார்ஜன் மகன் தெரிவித்துள்ளார் என்று கேட்டதற்கு அப்படி நான் எதுவும் கேட்கவில்லை என்று பிரியா தெரிவித்துள்ளார்.

டார்ஜன்  மகன் பத்திரிகையாளர்களிடம் காட்டிய பல புகைப்படங்கள் டார்ஜனும் பிரியாவும் சந்தோஷமாக இருக்கும் நெருக்கமான  புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரியா டார்ஜனை திருமணம் செய்து கொண்டதாகத் கூறப்படுகிறது.  அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை என்னவென்று போலீசார்  தனி அதிகாரியை நியமித்து விரிவாக விசாரித்தால் தான் உண்மை தெரியவரும்.  அதுதவிர நீதிமன்றத்தின் மூலம் இரு தரப்புகளிடமும் தீவிர விசாரணை செய்த பிறகு  தான் இந்த வழக்கின் உண்மைத்தன்மை என்னவென்று தெரியவரும்.

டார்ஜன் மீது பிரியா புகார் கொடுக்கப்பட்ட போது அனைத்து ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் செய்தியை வெளியிட்டனர்.  டார்ஜன்  மகன் கலெக்டரிடம் நேரில் சந்தித்து புகார் மனு அளித்த செய்தியை எந்த பத்திரிகையிலும் செய்தி வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து டார்ஜன்  மைத்துனர் பாதிரிவேடு தாஸ் என்பவர் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பிரியா தரப்பில் பணம் கொடுக்கப்பட்டு செய்தி வராமல் பார்த்துக் கொண்டார்கள்.

செய்தி வந்தால் பிரியா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டால் அவருடைய இமேஜ் பாதிக்கப்படும் என்று சில பத்திரிகையாளர்கள் பிரியா தரப்பில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு திட்டமிட்டே செய்தியை வெளியிடாமல் பார்த்துக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் .

நீதிமன்றத்தில் நாங்களும் பிரியா பற்றி பல தகவல்களையும் ஆடியோ வீடியோ போட்டோக்களையும் சமர்ப்பிப்போம் என்கிறார் தாஸ். இரு தரப்பும் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்,

இதையும் படிங்க.!