chennireporters.com

தனது சொந்த செலவில் நிவாரணப்பொருட்களை வழங்கிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர்.

 

 

கடந்த ஒரு வாரமாக மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு தனது சொந்த செலவில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகல் பாராமல் குடிநீர் வழங்கிய கவுன்சிலருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான பால், ரொட்டி ,பிஸ்கட்டுகள் வழங்கி வருகிறார்.புழல் ஒன்றியம் 2வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கண்ணம்பாளையம், தர்காஸ்,மல்லிமா நகர், சிங்கிலிமேடு, அம்பேத்கார் நகர்,சென்றம்பாக்கம், விளாங்காடு பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள 800க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள 4500 பேருக்கு  கவுன்சிலர் மல்லிகா மீரான் மற்றும் அவரது மகன் செல்வம் ஆகியோர் நிவாரணப்பொருட்களை வழங்கினார்கள்.மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நான்காவது நாளாக விளங்காடுபாக்கம் ஊராட்சி மற்றும் சென்றம்பாக்கம் ஊராட்சி உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீர், பால், பிரட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் உணவு என அனைத்தும் தனது சொந்த செலவில் செய்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்புயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவுன்சிலராக மக்களுக்கு தொடர்ந்து சேவைய செய்து மகளுடன் மக்களாக எப்போதும் நிற்பேன் என்கிறார். மேலும் தனது சேவைகள் தொடரும்  உதவி செய்ய விரும்புபவர்கள் தன்னுடன்  வந்து கைகோர்த்து தாங்களே வந்து உதவி செய்யுமாறு அன்புடன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் உணர்ச்சி பொங்க. அரசு தரப்பிலும் ஆளும் கட்சி தரப்பிலும் இதுவரை யாரும் வந்து உதவி செய்யவில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட  மக்கள்.

 

இதையும் படிங்க.!