சக பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவு படுத்தி வரும் தர்மபுரி மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீதர் அவர்கள் மீது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ். அறிக்கை வெளியிட்டுள்ளார். பத்திரிகையாளர் ஸ்ரீதர்
தருமபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை பகுதியை சார்ந்தவர் ஸ்ரீதர் (9842771655) இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தினத்தந்தி, காலை நாளிதழ் ஆகிய நிறுவனத்தில் போட்டோகிராபர் மற்றும் விளம்பர ஏஜென்ட் ஆக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு இவருடைய தாத்தா மற்றும் தந்தை ஆகியோர், இதே நிறுவனத்தில் பணியாற்றி உள்ளனர்.
இவர்கள் பெயர்களை வைத்துக்கொண்டு தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும், தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளி கடைகள் தொழிலதிபர்கள் விளம்பரத்தின் மூலமாக கையில் வைத்துக் கொண்டு செய்தியாளர் மத்தியில் அனைத்து செய்தியாளர்களும் நான் சொல்வது தான் கேட்க வேண்டும் என்று, முன்னனி நிறுவனங்கள் என்று சொல்லி நான்கு பேரை கையில் வைத்துக் கொண்டு ( அடுத்து அந்த நான்கு பேர்கள் பற்றி விரிவாக பதிவு செய்கிறேன் ) அனைத்து செய்தியாளர்களையும் அவருக்கு அடிமை ஆக்கி வந்திருந்தார்.தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ்
எதிர்த்து கேள்வி கேட்டால், அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு முகவரி இல்லாத பொய் புகார் (மொட்ட கடிதம் ) அனுப்பி அவர்களை மிரட்டி வரும் இவர், ஜாதி ரீதியாகவும் மற்றவர்களிடம் விமர்சனம் செய்து, ஜாதி வன்கொடுமைகளும், தொடர்ச்சியாக துன்புறுத்தல்களையும் செய்து வருகிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து செய்தியாளர்களின் பெயரை சொல்லி, தன்னை, தருமபுரி பத்திரிகையாளர் சங்கத் தலைவர் என்று பொய்யாக கூறி, தனியார் நிகழ்ச்சியில் மற்ற செய்தியாளர்களுக்கு கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு யாருக்கும் தராமல் எடுத்துச் சென்று விடுவதே இவருடைய வழக்கமாக உள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் நான் மட்டுமே சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற ஆணவத்தோடு இப்போது வரை பத்திரிகையாளர் சங்கத்தில் இருக்கும் பத்திரிகையாளர்களை ஜாதி பெயரை சொல்லி இவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதி இவர்களைப் பத்திரிக்கை துறையில் சேர்க்க வேண்டாம் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் கூறி மற்ற செய்தியாளர்களிடமும் தர்மபுரி மாவட்ட தொழிலதிபர்கள் இடமும் ஜாதியை இழிவுபடுத்தி விமர்சனம் செய்து மனரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறார்.ஸ்ரீதர் என்பவரோடு இணைந்து கொண்டு, மற்ற நான்கு செய்தியாளர்களும், ஜாதி ரீதியாக செய்தியாளர்களை தொடர்ந்து, அவமதித்து வருகிறார்கள். மற்ற செய்தியாளர்கள் எல்லோரும், ஜாதி மதம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றோம். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து செய்தியாளர்களும் ஸ்ரீதர் என்பவர் மீது கண்டனம் பதிவு செய்து வருகிறார்கள்.சட்டரீதியாகவும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்டத்திலுள்ள செய்தியாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள், ஒளிப்பதிவாளர்கள், தாலுக்கா நிருபர்கள், சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சக தோழர்களை தொடர்ந்து அவமதித்து வரும் மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீதர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தினத்தந்தி நிர்வாகத்தில் பணியாற்றும் பலர் இதுபோன்ற கேவலமான பல செயல்களை செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. நடக்க முடியாதவர்கள், எழுத முடியாதவர்கள் வயதானவர்கள் எல்லாம் இன்னும் அதில் முக்கிய பொறுப்பு வகித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக திருவள்ளூரில் செய்தியாளராக பணியாற்றி வந்த அசோக் என்பவர் தற்போது கடம்பத்தூர் பகுதி நேர எழுத்தராக பணியாற்றி வருகிறார்.
அசோக் குமார்
இவர் திருவள்ளூரில் எழுத்தராக பணியாற்றும் போது கலெக்டரிடம் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்களிடம் ”இருந்து கட்டிங் கவர் வாங்காமல் விடமாட்டாராம்.” பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுக்க முடியாது என்றால் ஏன் கலெக்டரிடம் மனு கொடுக்க வருகிறீர்கள் என்று கிண்டலாக பேசுவது மட்டுமில்லாமல் நூறு ரூபாயாவது கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று பிச்சை எடுக்காத குறையாக கேட்பாராம். இப்படி இவர் பிச்சை எடுத்து சம்பாதித்த சொத்து பல லட்சத்தை தாண்டும் என்கிறார்கள். தினத்தந்தியில் பணியாற்றும் பலர் இது போன்ற கையேந்தும் தொழிலில் சம்பாதித்து நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்பதற்கு அசோக் ஒரு உதாரணம் என்கிறார்கள் திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள்.