தொடரும் மாணவிகளின் மரணம் அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன திருவேற்காடு பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவேற்காடு அடுத்த மாதிரி வேடு பகுதியில் பெண்கள் நர்சிங் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார் நேற்று காலை வகுப்புக்குச் சென்று மதியம் ஹாஸ்டலுக்கு சாப்பிட வந்தவர் மீண்டும் கல்லூரிக்குப் போகவில்லை.
ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் சுமதி என்னுடைய அறை கதவுகள் திறக்காத காரணத்தால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் கதவைத் தட்டி பார்த்தனர்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த மாணவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது சுமதி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஹாஸ்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான தகவலை அவர்கள் பெட்ரோலுக்கு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மாணவி சுமதி இறந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
மன உளைச்சலை அல்லது என்ன காரணம் என்பதை இதுவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட சுமதியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் ஆய்வுக்கு எடுத்துள்ளனர்.
அது தவிர அவரது அறையில் சுமதி ஏதாவது கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பதையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவருடன் படித்த நண்பர்கள் ஹாஸ்டலில் தங்கி உள்ள நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாணவியை தொடர்ந்து இது மூன்றாவது மரணம் வெளியூரில் தனது பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோருக்கு அவர்களின் உயிரின் மீது பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது சிபிசிஐடி போலீசார் சுமதி தற்கொலை தொடர்பான வழக்கை விசாரித்து வருகின்றனர்.