திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு தனது கிணறை காணவில்லை என்று காமடி செய்வார்.
அதே போல கரூர் அருகே கிணறு காணவில்லை என்று கிராம மக்கள் அதிகாரி களிடம் புகார் அளித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகமலை ஒன்றியம் பொருந்தலூர் கிராமத்தில் தெலுங்கப்பட்டி மேலத்தெருவில் 2 வது வார்டில்
அரசு மற்றும் கிராமப் பஞ்சாயத்துக்கு சொந்தமான 100 அடிக்கு மேல் ஆழமாக இருந்த அரசு பொது உறை கிணற்றை திடீரென யாரோ திருடிச் சென்று விட்டனர்.
இதனால் ஊர் பொது மக்கள் கிணறை காணவில்லை என்று கண்ணீருடன் அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
அதை கண்டுபிடித்து தருமாறு பொருந்தலூர் கிராம பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கும் மற்றும்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தோகமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் பொருந்தலூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திற்க்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிணத்தை திருடியவர் யார்?
எப்போது கண்டுபிடித்து தருவீர்கள்?
திருடுபோன கிணத்தை அதே இடத்தில் எப்போது வைக்கப் போகிறீர்கள்???
அய்யோ அய்யோ 100 அடிக்கும் மேலான கிணத்தை காணவில்லையே?
ஐயா கண்டுபிடித்து சீக்கிரம் தாருங்கள்.
என்று கரூர் மாவட்டம் தோகமலை ஒன்றியம் பொருந்தலூர் கிராம பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.