chennireporters.com

மனிதாபிமானம் இல்லாமல் தான் பெற்ற குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட கொடூரமாக தாக்கும் தாய்.

சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த வீடியோ காட்சி பற்றித்தான் நெட்டிசன்கள் பரவலாக தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தான் பெற்ற குழந்தையை ஒரு தாய் ஈவு இரக்கமின்றி தாக்கும் வீடியோ காட்சியை பார்க்கும் போது நெஞ்சம் பதருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மணலப்பாடி அருகே உள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்த துளசி என்ற பெண் தான் என தெரியவந்தது.

அவர் தன்னுடைய இரண்டு வயது குழந்தை பிரதீப்பை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை அடிப்பதைப் போல படுத்திருக்கும் குழந்தையின் வாயில் வாய்ப்பகுதியில் கடுமையாக தாக்குகிறார்.

அந்தப் பெண் குழந்தையின் உதடு,நாக்கு என அனைத்து பகுதியிலும் ரத்தம் சொட்ட சொட்ட அடிக்கும் அந்த பெண் தனது கையில் அடி பட்டிருப்பதையும் பார்த்துவிட்டு மீண்டும் தனது குழந்தையை அடிக்கிறார்.

இந்த வீடியோ பார்க்கும் போது மனதில் கடுமையான கோபமும் வழியும் வரச் செய்கிறது.

கணவரோடு ஏற்பட்ட தகராறில் குழந்தையை தாக்கி அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார் தற்பொழுது கணவரை பிரிந்து துளசி ஆந்திராவில் இருக்கிறார்.

அதனையடுத்து அடுத்து விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல் துறையினர் துளசி மீது இந்திய தண்டனை சட்டம் 323,355, Red 75 JJ act ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் மேலும் ஆந்திராவில் உள்ள துளசியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!