chennireporters.com

உயிருக்கு போராடிய 306 இலங்கை தமிழர்களை காப்பாற்றிய ஜப்பான் நாட்டுக்கப்பல்.

 306 இலங்கை அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

306 இலங்கை தமிழ்  அகதிகளை ஏற்றி சென்ற கப்பல் புயல் காற்றால் தாக்கப்பட்டு பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு இடையே மூழ்கும் நிலையில் இருந்தது.  நடு கடலில் தத்தளிக்கும் இவர்களை அரசியல்வாதிகள் யாராவது காப்பாற்றி ஐ.நாவுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கே. எஸ். ராதாகிருஷ்ணன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் ஜப்பான் நாட்டு கப்பல் இலங்கைத் தமிழர்களை பத்திரமாக மீட்டுள்ளது.  கனடாவை நோக்கி செல்ல முயற்சித்த 306 இலங்கை அகதிகள் நேற்றைய தினம் சிங்கப்பூரின் கடற்படையின் உதவியுடன், ஜப்பான் கப்பல் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

படம் உதவி ஜாப்னா ஒன்.காம்.

இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் நேற்றிரவு வியட்நாம் துறைமுகத்தை நோக்கி அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்குள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கப்பலில் பயணித்த அகதி ஒருவரின் உறவினர், பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
இந்த கப்பலில் சென்றவர்கள் தமது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து, மீண்டும் இலங்கைக்கு வர விரும்பாத நிலையிலேயே கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர்.

கனடா செல்லும் அகதி ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டாலர் அறவிடப்பட்டதாககப்பலில் பயணித்த அகதியின் சகோதரன் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.  குறித்த இலங்கையர்கள் உரிய வகையில் விஸாக்களை பெற்று, விமானத்தின் மூலம் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக மியன்மார் நோக்கி பயணித்துள்ளனர்.

முகவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 5000 அமெரிக்க டாலரின் ஊடாக, விமான பயணச் சீட்டுக்கள், விஸா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.   இந்த நிலையில், மியன்மார் நோக்கி சென்ற இலங்கையர்கள், அங்கிருந்து கடந்த மாதம் 10ம் தேதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில், அண்மையில் தூவாரமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

 

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  நாட்டிற்கு அனுப்பினால், நாங்கள் தற்கொலை செய்துக்கொள்வோம் என அங்குள்ள அகதிகள் கூறுகின்றார்கள்.

இதையும் படிங்க.!