chennireporters.com

கட்டிங், செட்டிங், திருவேற்காடு நகராட்சி கமிஷ்னரின் பித்தலாட்டம் முகத்திரையை கிழித்த ஒப்பந்ததாரர்.

ஒப்பந்ததாரர் ஒருவர்  திருவேற்காடு நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷாவுக்கு லஞ்சமாக கொடுத்த 10 லட்சம் பணத்தை திருப்பி கேட்கும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஜி எஸ் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் குருநாதனிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம் அவர் அளித்த பதில்கள் வருமாறு.

                                                                       குரு நாதன்

நான் திருவேற்காடு பகுதியில் ஜி எஸ் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை  நடத்தி வருகிறேன். நான் சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த பணி தொடர்பாக திருவேற்காடு நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷாவுக்கு 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன்.

திருவேற்காடு நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவின் வாட்ஸ் அப்புக்கு குருநாதன் அனுப்பியுள்ள ஆடியோ மெசேஜ்.

அந்த பணத்தை இதுவரை அவர் தராமல் இழுத்தடிக்கிறார். பணத்தை திருப்பி கேட்டால் குண்டர்களை வைத்து பல்லை உடைப்பேன் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார் என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளேன் அப்போது கூட அவர் பயப்படாமல் என்னை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது நீ எவனிடமாவது போய் சொல்லிக் கொள் என்னை எவனும் ஒன்றும் கழட்டவும் முடியாது புடுங்கவும் முடியாது என்கிறாரார் ஜகாங்கீர் பாஷா. இது தொடர்பாக பல புகார்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார் குருநாதன்.                                 கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா.

நகராட்சிகளின் நிர்வாக இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா மற்றும் அமைச்சர் நேருவுக்கும் 60 லட்சம்  ரூபாய் லஞ்சம் கொடுத்து  திருவேற்காடு நகராட்சிக்கு கமிஷனர் பதவிக்கு வந்துள்ளேன் இந்த பணத்தை திருப்பி எடுக்காமல் விடமாட்டேன் என்கிறார் ஜஹாங்கீர் பாஷா. இவரால் திருவேற்காடு நகராட்சியில் ஏறக்குறைய 30 ஆயிரம் வாக்குகள் மேல் எம்பி தேர்தலில் எங்களுக்கு திமுகவுக்கு வராது என்கிறார்.  எந்த வேலைக்கானாலும் லஞ்சம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார் கமிஷனர் ஜகாங்கீர் பாஷா. எனக்கு பணம் தர வேண்டி பணம் குறித்து ஆவடி எம்எல்ஏ நாசர் அவர்கள் கூட பணத்தை  திருப்பி தந்து விடுங்கள் என்று அறிவுறுத்தினார். அதேபோல திருவேற்காடு சேர்மனும் அறிவுறுத்தியும் கூட இவர் எனக்கு தர வேண்டிய 10 லட்ச ரூபாய் பணத்தை தரவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் குரு .மேலும் ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு வேலையை ஒதுக்கினால் அதற்கு தேவையான  கமிஷனை முன்னதாக பெற்றுக் கொள்ளும் ஜஹாங்கீர் பாஷா வேலை முடிந்த பின் போடப்படும் மொத்த பில்லு அதாவது ஒரு வேலையின் திட்ட மதிப்பீடு  சுமார் 10 லட்சம் ரூபாய் என்றால் இவர் 16 லட்சம் ரூபாய் என்று போலியாக கணக்கெழுதி பில்லுக்கொடுங்கள் நான் அதை உங்களுக்கு தருகிறேன்.

வேலைக்கான தொகை போக மீதமுள்ள 6 லட்சம் ரூபாய் பணத்தை எனக்கு லஞ்சமாக கொடுங்கள் என்று ஒவ்வொருவரையும் கேட்கிறார். இதனால் ஒப்பந்ததாரர்களிடையே பெரிய மன வருத்தமும் கோபமும் ஏற்படுகிறது. மக்களுக்கான பணியை தரமானதாகவும் சிறப்பாகவும் செய்ய முடியாத சூழலும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. பல புகார் கடிதங்கள் எழுதியும் இதுவரை இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் பாதிக்கப்பட்ட குருநாதன்.திருவேற்காடு நகராட்சிக்கு சென்று விசாரித்தோம் கோலடி பகுதியில் திமுக கவுன்சிலர் ஒருவர் கழிவுநீர் தண்ணியை ஆலமரத்தடியில் நல்ல தண்ணீர் கிணறும் ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்தில் கொட்டுகிறார். அதன் மீது நடவடிக்கை இல்லை திருவேற்காடு நகராட்சியில் பாதாள சாக்கடைகள் கழிவுநீர் சாக்கடைகள் தரமானதாக கட்டப்படவில்லை மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது நகராட்சி கமிஷனரின் வேலைகள் தரமானதாக இல்லை. ஆக மொத்தத்தில் நாறுகிறது திருவேற்காடு நகராட்சி. வீட்டு வரி வசூலிப்பதில் ஊழல், தொழிற்சாலைகளுக்கு  சொத்துவரி மற்றும் வரி வசூலிப்பதில் ஊழல், எங்கும் ஊழல், எதிலும் ஊழல்.. கடந்த எட்டு மாதத்தில் மட்டும் ஜஹாங்கீர் பாஷா செய்துள்ள ஊழல்கள் ஒரு ஐந்து கோடியை தாண்டும் என்கிறார்கள். இவர் செய்த ஊழல்கள் மற்றும் ஊழல்களை மட்டும் விசாரிப்பதற்கு ஒரு பத்து பேர் கொண்ட அதிகாரிகள் டீமையே அனுப்ப வேண்டும் என்கின்றார்கள் சில அதிகாரிகள். இந்த ஊழல் தொடர்பாக கமிஷ்னர் ஜஹாங்கீர் பாஷாவின் கருத்தை அறிய நாம் முயற்சி செய்தோம். அவரது செல்ஃபோன் சேவையில்லை இது தொடர்பாக அவர் தரப்பு விளக்கத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா.

ஜஹாங்கீர் பாஷாவுக்கு எதிராக திருவேற்காட்டில் உள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏறக்குறைய அதிகாரிக்கு தகுதி இல்லாத ஒருவரை இந்த பணியில் அரசு நியமித்திருப்பது அவமானத்தின் உச்சம் என்கிறார்கள். நகராட்சி நிர்வாகத்தில் அலுவலக உதவியாளராக வேலைக்கு சேர்ந்த ஜஹாங்கீர் பாஷா டிகிரியே தொலைதூரக் கல்வியில் தான் முடித்ததாக சொல்கிறார்கள்.

அதிகாரத்தில் இருக்கும் விஐபிகளை ஜால்ரா  அடித்து கால் பிடித்து இவர் அடிக்கு ஆட்டம்  அதிகம். இவரது கொட்டத்தை அடக்கியே ஆக வேண்டும் என்கின்றனர் ஜகாங்கீர் பாஷாவுக்கு எதிராக போர் கொடி தூக்கும் ஒப்பந்ததாரர்கள். பொதுமக்கள் அரசு ஜகாங்கீர் பாஷாவுக்கு கடிவாளம் கட்டுமா அல்லது வேடிக்கை பார்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜகாங்கீர் பாஷாவின் ஊழலை ஒழிக்க அடாவடித்தனத்தை அடக்க ஒரு அந்நியன் விக்ரமும், இந்தியன் தாத்தா கமலும், ரமணா விஜயகாந்த் இந்த மூன்று பேரும் ஒரே நேரத்தில் வந்தால் தான் இவரை ஒழிக்க முடியும் என்கின்றனர் திருவேற்காடு பொதுமக்கள்.

இதையும் படிங்க.!