தமிழக முழுவதும் ஏழை எளிய மக்களிடம் வீட்டு வசதி வாரியத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி தருவதாகவும், மற்றும் தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஏமாற்றி பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்தவரை கைது செய்ய வேண்டும்.
தமிழக முதலமைச்சரின் பெயரை ராஜ்குமார் அதிகாரிகளிடத்தில் தவறாக பயன்படுத்தி வருகிறார். அவர் நேரடியாக இவர் அதிகாரிகளிடம் சொன்னால் அனைத்து அரசு அதிகாரிகளும் பொம்மை போல் ஆடுவார்கள் என்றும் கூறிக்கொண்டு பொது மக்களை ஏமாற்றி வருகிறார். அரசு முத்திரைகளை தவறாக பயன்படுத்தியும்.
சேலம் ஓமலூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் எஸ். வெற்றிவேல் அவர்கள் பெயரை தவறாக பயன்படுத்தி மணி என்பவரும் ராஜ்குமார் என்பவரும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
திங்கட்கிழமை அன்று தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரிகளையும் மற்றும் தலைமைச் செயலாளர் அவர்களையும் நேரடியாக சந்தித்து இந்து மக்கள் கழகத்தின் சார்பாக மோசடி நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் இந்த இரண்டு நபர்களையும் கைது செய்யக் கோரியும் அவர்கள் செய்த பிராடு தனங்களை ஆதாரத்துடன் இந்து மக்கள் கழகத்தின் சார்பில் ஒரு சில முக்கிய ஆவணங்களை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு பணிகளை வாங்கி தருவதாக ராஜ்குமார் பல போலியான உத்தரவுகளை தானே தயாரித்து அரசு முத்திரையுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டரை அடித்து அனுப்பி உள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு எடுத்துச் சென்று விசாரித்த போது அது போலியாக அடித்த அரசு உத்தரவு என்று தெரியவந்தது. அதன் பிறகு ராஜகுமாரை அவர்கள் தொடர்பு கொண்ட போது ராஜ்குமார் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது .
இப்படி தமிழ்நாடு முழுவதும் ராஜ்குமார் சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.