கேளம்பாக்கம் ஏ.சி. ரவிக்குமரன் ஆயுதப்படை பெண் காவலர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி இரவு நேரங்களில் ஆபாசமாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் வரும் கேளம்பாக்கம் காவல் துறை உதவி ஆணையராக இருப்பவர் அ.ஜெ. ரவிக்குமரன் காவல் நிலையப்பணிகளுக்கு வரும் ஆயுதப்படை பெண் காவலர்களை தனியாக அழைத்து இரட்டை அர்த்தத்தில் காம பாஷையுடன் பேசி வருகிறாராம் புதிதாக திருமணமான ஆயுதப்படை பெண் காவலரியிடம் முதலிரவு எப்படி இருந்தது என்று வெளிப்படையாக கேட்டு சிரித்து வெட்கப்பட்டாராம்.அது தவிர இரவு நேரத்தில் அந்த பெண் காவலருக்கு ஆபாசமான வாட்சப் மெசேஜ்களை அனுப்பி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெண் காவலர் நடந்த விஷயத்தை தனது கணவரிடம் சொல்லி புகார் கொடுத்து இருக்கிறார்கள்.
கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் புகார் கொடுத்த பெண் காவலர் மற்றும் அவரது கணவரை லேசாக மிரட்டி புகாரை வாபஸ் வாங்க வைத்தாராம். இது தொடர்பாக உளவுத்துறை நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவலரிடமும் அவரது கணவரிடமும் விசாரித்தனர். அது தவிர அவர் வேறு யாருக்கெல்லாம் இது போன்ற ஆபாச வாட்ஸப் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என்று லிஸ்ட்டை தயார் செய்து உளவுத்துறை உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.
இதனால் கோபப்பட்ட உதவி ஆணையர் ரவி குமரன் உளவுத்துறையை சேர்ந்த முதுநிலை காவலர் அப்பாதுரை மீது ஒரு பொய்யான புகாரை வாட்ஸ் அப்பில் தட்டி விட்டு அதை வைரலாக்கி காவல் துறையில் டென்ஷனை உருவாக்கினாராம். இதில் ஆடிப் போன அப்பாதுரை தான் எதுவும் தவறு செய்யவில்லை என்பதை தனது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும் உளவுத்துறையினர் அப்பாதுரை தொடர்பாக விசாரணை செய்து ஒரு அறிக்கை அளித்துள்ளனர். ஆனால் தனக்கு எப்போது பிரச்சனை ஏற்படும் என்று தெரியாமல் கலங்கிப்போய் இருக்கிறாராம். இந்த புகார் தொடர்பாக ஏசி ரவிக்குமரனை அவரது செல்போனில் அதாவது இந்த 9840160252 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோம் . அவரது செல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்த புகார் குறித்து அவர் தரப்பு விளக்கம் அறிய முயற்சி செய்தோம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை . இந்த புகார் தொடர்பாக அவரது கருத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம் .
நாம் விசாரித்தவரையில் தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் ரவிக்குமரன் மன்மத ராஜாவாகத்தான் பணியாற்றி இருக்கிறார் என்று தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் கேளம்பாக்கம் சரகத்தில் வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை எவ்வளவு கல்லா கட்டுகிறோம் என்கிற நிலையே தெரியாத அளவுக்கு வருமானம் இருக்குமாம். ரவிக்குமரன் நீலாங்கரையில் சொகுசான வீடு கட்டி இருப்பதாக சொல்கிறார்கள் கேளம்பாக்கம் போலீசார் .டீக்கடையில் டீ குடித்தவர்களை எல்லாம் பணி நீக்கம் செய்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஏசி ரவிக்குமரன் விஷயத்தில் வாய் மூடி மௌனம் காப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை . ஆயுதப்படை பெண் காவலர்கள் என்றால் உயர் அதிகாரிகளுக்கு கூட ஏளனமாக தான் இருக்கும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை பெண் காவலர்கள்.
ஏசி ரவிக்குமரன் தொப்பி தப்புமா அல்லது லத்தியை சுழற்றுவாரா என்பதை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுக்கு பிறகு தான் தெரியவரும்.மேலும் பந்தோபஸ்து டியூட்டிக்கு வரும் பெண் காவலர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதையும் ஏ.சி.ரவிக்குமரன் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதை வெளியே சொன்னால் மானம் போய் விடும் என்று பெண் காவலர்கள் உள்ளுக்குள்ளேயே வைத்து குமுறி வருகின்றனர்.இன்னொரு பக்கம் இது போன்ற கீழ்த்தரமான காவலர்களின் செயல்பாடு நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை சீர் குலைக்கும் வகையில் நடந்து கொள்வது வேதனைக்குறியதே. அதுவும் காவல்துறையின் செயல்பாட்டுக்கு முதுகெலும்பாக உள்ள அதிகாரி ரவிக்குமரனின் செயல் வெட்கக்கேடானது என்கின்றனர் கேளம்பாக்கம்வாசிகள்.