chennireporters.com

#road accident சாலை விபத்தில் மரணம் அடைந்த அரக்கோணம் இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி.

அரக்கோணத்தை சேருந்த இளைஞன் மகேஸ்வரன் என்பவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி வலியுறுத்தியதின் பேரில் தனது கணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

 

அரக்கோணம் டவுன்ஹால் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் வயது 26 திருவள்ளூரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 4 ம் தேதி வேலை  முடிந்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக்கில் அரக்கோணம் நோக்கி சென்றார். அப்போது கனகம்மாசத்திரம் அருகே உள்ள புதூர் என்ற கிராமத்திற்கு அருகில்  சென்றபோது நாய் குறுக்கே வந்தது.  இதனால் நாயின் மீது மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார் மகேஸ்வரன் இதில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.  இது குறித்து மகேஸ்வரன் மனைவி நிர்மலா புகாரின்படி வழக்கு பதிந்த கனமாச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மகேஸ்வரன் கடந்த எட்டாம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அதன் பிறகு அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினார். அதன் பெயரில் மனைவி  நில்மலா அவரது தாய் சாந்தி அப்பா முருகேசன் மற்றும்  உறவினர்கள் உடல் உறுப்பு தானம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழங்கினர்.  அதன் பெயரில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

தமிழக அரசே மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்பவரின் இறுதி சடங்கில் அரசு இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.  அதன் அடிப்படையில் அரக்கோணம் ஆர்டிஓ, மற்றும் அதிகாரிகள் மகேஸ்வரன் வீட்டிற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஆனால் அந்தத் தொகுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ சு.ரவியோ அல்லது திமுக எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் யாரும் இரங்கல் தெரிவிக்கவோ அஞ்சலி செலுத்தவோ வரவில்லை என்பது குறிப்பிட தக்கது.

தனது சொந்த மாவட்டத்தின் அமைச்சராக இருக்கிற கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி பெயரளவுக்கு கூட உடல் உறுப்பு தானம் செய்த மகேஷ்வரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்கின்றனர் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள்.  சாலை விபத்தில் உயிரிழந்த மகேஸ்வரனின் மனைவி நிர்மலா எம்.பி.ஏ பட்டதாரி தனக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. எனவே தமிழக முதலமைச்சர் நிர்மலாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இதையும் படிங்க.!