chennireporters.com

சுடுகாட்டு பாதையை சரி செய்து தர வேண்டும் கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை.

இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் பெரிதும் சிரமபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த கண மழையால் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள முக்கரம்பாக்கம் கிராமத்தில்  பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.  இதனால் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் வழித்தடம் வெள்ளத்தால்  பத்து மீட்டர்  அளவிற்கு சேதமடைந்துள்ளது.

இதுவரை இந்த வழிப்பாதை சரி செய்யாமல் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு இந்த வழித்தடத்தின் மூலமாக இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வது வழக்கம் இதற்கு மாற்று பாதை கிடையாது.

இந்நிலையில், முக்கரம்பாக்கத்தில் இன்று  ஒருவர் இறந்துவிட்டார். அவரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வழி இல்லாமல் ஓடைக்குள் பிணத்தை உறவினர்கள் தூக்கி சென்றனர் .

இந்த வழித்தடத்தை  மாவட்ட நிர்வாகம்  உடனடியாக சரி செய்து சுடுகாட்டிற்கு செல்ல வேண்டிய இந்த பாதையை சீர்படுத்தி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களுக்கு மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க.!