chennireporters.com

மறக்குமா நெஞ்சம் பலிகடா ஆக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி. தவறு செய்தவர்களை காப்பாற்றிய கமிஷனர் அமல்ராஜ்.

சென்னை பனையூரில் நடைபெற்ற ரகுமான் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலில் தமிழக முதலமைச்சரின் வாகனம் சிக்கிக்கொண்டது . இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் துணை  ஆணையர் தீபா சத்யன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். காரணம் போக்குவரத்து துணை ஆணையர்  குமார் பாதுகாப்பு பணியை சரியாக செய்யாமல்  சொதப்பியதே காரணம் என்கின்றனர் காவல்துறையினர். கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி பனையூரில் நடைபெற்ற ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளில் சம்பந்தமே இல்லாமல் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்தியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.  தவறு செய்த போக்குவரத்து துணை ஆணையர் குமார் மீது நடவடிக்கை எடுக்காமல் தீபா சத்யன் பலிகடா ஆக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி உள்ளது.ஏ சி டி சி நிறுவனத்தினர் சென்னை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அலுவலகத்தில் பனையூரில் ஆதித்ய ராம் பேலஸில் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.  அந்த இடத்தில் இசை நிகழ்ச்சியோ அல்லது பொது நிகழ்ச்சிகள் நடத்த ஏற்கனவே தடை உள்ளது என்றும்  முக்கிய விஐபிகள் உள்ள குடியிருப்பு பகுதி என்பதால் அந்த இடத்தில் இதுவரை எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது இல்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் கமிஷனர் அமல்ராஜ் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்தியனை கலந்து ஆலோசிக்காமல் தன்னுடைய அதிகாரத்தின் அடிப்படையில்  அனுமதி வழங்கி இருக்கிறார். அது தவிர போக்குவரத்து ஒழுங்குபடுத்த துணை ஆணையர் குமார் அவர்களை நியமித்திருக்கின்றார். ஆனால் அவர் தனது பணியை ஒழுங்காக செய்யாமல் சொதப்பியதால் முதல்வரின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளானதற்கு அவரே காரணம் என்று கூறப்படுகிறது.இது  தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க டிஜிபி சங்கர் ஜுவால் உத்தரவிட்டிருந்தார். விசாரணை செய்த  தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ்  போக்கு வரத்து துனை ஆணையர் குமார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சம்பந்தமே இல்லாத தீபா சதியனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.  வழக்கப்படி முதல்வரின் போக்குவரத்தை தீபா சத்தியம் தான் கவனித்திருக்க வேண்டும் ஆனால் இணை ஆணையர் பா.மூர்த்தி அவர்கள் தாம்பரம் துணை ஆணையர் பவன் குமாரை முதல்வரின் போக்குவரத்தை கவனிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.ஆனால் அவரும் தனது வேலையை சரியாக கவனிக்கவில்லை மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒவ்வொரு போலிஸ் அதிகாரிகளுக்கும் வி வி ஐ பி டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.  குறிப்பாக கமிஷனருக்கு நிறைய டிக்கெட்டுகள்  வழங்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள். உண்மைக்கு மாறாக கமிஷனர் அமல்ராஜ் ஏன் தீபா சத்தியன் மீது நடவடிக்கை எடுத்தார் என இதுவரை தெரியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.  இது குறித்து நாம் சில போலிஸ்  அதிகாரிகள் தரப்பில்  விசாரித்தோம். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கல்லூரி நண்பர்தான் இந்த போக்குவரத்து துணை ஆணையர் குமார் அவருடைய ஆதரவு இருப்பதால் இவர் செய்த தவறை மறைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கினர் என்கிறார்கள். ஆட்சி மாறம் நடந்த பிறகு திமுக ஆதரவு அதிகாரிகளை காட்டிலும் (ஐஏஎஸ் , ஐபிஎஸ் மற்றும் உளவுத்துறை ) அதிமுக ஆதரவு அதிகாருகளே அதிக அளவில் இருக்கின்றனர் என்கிறார் கோட்டையில் உள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரி.நிகழ்ச்சி  நடந்த அன்று  அதிகாரிகள் யார் ,யார் எந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் திட்ட வரைவு அறிக்கை வழங்கியுள்ளனர். அதில் தீபா சத்தியன் விழா மேடை  மற்றும் 1முதல் 3 வது கேட்டகிரி வரை பாதுகாப்பு பணியியில் இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  அது தவிற இசை நிகழ்ச்சி தொடர்பாக எந்த வித அசம்பாவிதங்களோ அல்லது பாதுகாப்பு குறைபாடு எதுவும் ஏற்படவில்லை. அது தவிற இதுவரை எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் தீபா சத்தியன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கமிஷ்னர் அமல்ராஜ் தெரிவிக்கவில்லை. சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை தனது தரப்பு விளக்கத்தை டிஜிபி சங்கர் ஜுவால் மற்றும் உள்துறை செயலாளர் அமுதா அவர்களிடம் தீபா சத்தியன் கடிதம் அளித்துள்ளார். திருவிழா, பொதுக்கூட்டம், மாநாடு, இசை நிகழ்ச்சி என எந்த நிகழ்ச்சிகளானாலும் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணிகள்,குறைபாடுகள் எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்யாமல் உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கிவிட்டு பின்னர் தன் தவறை மறைக்க தான் சொல்லும் உத்தரவை மதிக்க வேண்டும் என்று தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர். உண்மை நிலையையும் அவர்கள் தரப்பு விளக்கத்தையும் கருத்தையும் கேட்காமல் கடைசியில் அவர்களை பலிகடா ஆக்குவது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர் சில  அதிகாரிகள்.

இந்த செய்தி தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!