chennireporters.com

மலேசியாவிற்கு கடத்த முயன்ற பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.

சென்னையிலிருந்து மலேசியாவிற்கு சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,366 நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய கார்கோவில் 13 பைகளில் 230 கிலோ எடை கொண்ட பார்சல்கள் மலேசியாவிற்கு அனுப்ப முயன்றனர்.

இதுகுறித்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் பார்சல்கள் அனுப்பும் பிரிவிற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் மலேசியாவிற்கு செல்லும் அனைத்து பெட்டிகளையும் சோதனையிட்டனர்.

அப்போது 230 கிலோ எடை கொண்ட 13 பெட்டிகளில் நட்சத்திர ஆமைகள் அடைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அதை சுங்கத்துறை அதிகாரிகள் கைபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற நிறுவனத்தின் பெயர் என்ன என்ன பெயரில் எந்த நிறுவனத்திற்கு அனுப்புவதாக குறிப்பிட்டிருந்தார்கள் .

எப்படி இதில் ஆமைகள் வந்தன சோதனையிடும் போது (scan) எப்படி கண்டு பிடிக்கவில்லை என பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளின் சர்வதேச மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று சொல்லுகிறார்கள் சுங்கத்துறை அதிகாரிகள். தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வீடுகளில் கவர்ச்சிகரமான செல்லப்பிராணிகள் ஆகும்.

நட்சத்திர ஆமைகளை வளர்த்து வந்தாள் அந்த வீடுகளில் நல்ல செல்வம் கொழிக்கும் என்றும் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது அதுதவிர ஆன்மிகத்திற்கும் கலாச்சார அடையாளங்கள் ஆகும்.

இந்த நட்சத்திர ஆமைகளை பயன்படுத்தி வருகின்றனர் சிங்கப்பூர் மலேசியா கொரியா சீனா போன்ற நாடுகளில் உணவகங்களில் சிறந்த உணவாகவும் இந்த ஆமைக்கறி பயன்படுகிறது.

ஆமைகளின் உடலுறுப்புகள் பாரம்பரிய மருத்துவத்திற்கு முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன இதனால் தான் சர்வதேச அளவில் இந்த நட்சத்தி ஆமைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

தமிழகத்தில் ஒரு பழமொழி புழக்கத்தில் இருக்கிறது ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்பார்கள் ஆனால் முயலாமையை தான் முன்னோர்கள் அப்படி சொன்னார்கள் என்பதை இன்றுவரை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

ஆனால் உலக நாடுகளில் ஆமைகளை வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கிறார்கள்.

இதையும் படிங்க.!