chennireporters.com

லாக்கப் டெத் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் பணி நீக்கம்.

இறந்துபோன ராஜசேகர்

சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய தில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேற்று உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர் அதில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உட்பட 5 பேரை பணிநீக்கம் செய்து வடக்கு மண்டல இணை ஆணையர் அன்பு உத்தரவிட்டார்.

கொடுங்கையூரில் வீடு ஒன்றில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது செங்குன்றத்தில் தனது நண்பர்களிடம் நகைகளை கொடுத்திருப்பதாகவும் அதன் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தபோது நகைகளை மீட்க முடியவில்லை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜசேகரை திருவள்ளூரில் கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர்அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காவலர்கள் சிகிச்சை அளித்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்

ற போது ராஜசேகர் இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த ராஜசேகர் மீது கொலை முயற்சி திருட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக காவல்
துறையினர் தெரிவிக்கின்றனர்.

விசாரணைக் கைதி மரணம் அடைந்ததை அறிந்து சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு இணை ஆணையர் ஈஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அன்பு ஐ.பி.எஸ். இணை ஆணையர்

ராஜசேகரிடம் விசாரணை செய்த காவலர்கள் யார் எங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

இதில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், சப்இன்ஸ்பெக்டர் பொன்ராஜ்,
கன்னியப்பன், தலைமை காவலர்கள் ஜெய சேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ராஜசேகரின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஜார்ஜ் மில்லர் இன்ஸ்பெக்டர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.துறை ரீதியாக அவர் மீது பல புகார்கள் நிலுவையில் உள்ளதாக கூறுகிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

இதையும் படிங்க.!