chennireporters.com

இளைஞர் வெட்டி கொலை. கத்தியுடன் தெருத்தெருவாக சுற்றிய கொலையாளி.

கொலையாளி அப்பு (எ) சுபாஷ் சந்திரபோஸ்

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் ஜே, ஜே, நகர் பகுதியை சேர்ந்தவர் அப்பு என்கிற சுபாஷ் சந்திரபோஸ்.இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் முருகன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.அவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அப்பு க்கும் முருகனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது ஏற்கனவே இரண்டு வாலிபர்களும் மது குடித்து இருந்தனர்.

அது தவிர்த்து கஞ்சா புகைதாகவும் தெரிகிறது.இந்நிலையில் போதை தலைக்கேறிய அப்பு முருகனிடம் சிங்கிள்ஸ் செய்து கொள்ளலாமா போடலாமா என்று அப்பு முருகனிடம் கேட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட முருகன்.

அதற்கு முருகன் சரி என்று சொல்லி அப்பு வீட்டு அருகில் இருந்த சுடுகாடு பகுதிக்கு முருகனை அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு முருகன் அப்புவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில் அடிப்பட்ட அப்பு தனது நண்பர்கள் 2 பேர் துணையுடன் வீட்டில் இருந்த முருகனை தனது நண்பர் அழைப்பதாக அழைத்து வந்து அப்பு மீன் வெட்டும் கத்தியால் முருகனை கை, கால், தலை ஆகிய பகுதிகளில் பலமாக வெட்டியுள்ளார்.

இதில் காயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் தப்பி ஓடி செல்வி என்பவரது வீட்டில் வாஷிங் மெஷின் வைத்திருக்கும் இடத்தில் மறைந்து உட்கார்ந்து கொண்டார்.

அப்போது துரத்தி வந்த அப்பு மற்றும் அவரது நண்பர்கள் முருகனை தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக வெட்டி தலையை துண்டாக வெட்டி உள்ளனர்.

இதில் வீட்டின் உரிமையாளர் செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.இதற்குள் முருகனை கொலை செய்த அப்பு கத்தியுடன் புல்லரம்பாக்கத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் நடந்து சென்றுள்ளார்.

ஒரு கையில் சிகரெட்டும் ஒரு கையில் கத்தியுடன் சுற்றி வந்தவரை பலர் பார்த்துள்ளனர்.

அதன் பிறகு புல்லரம்பாக்கம் உள்ள காவல்நிலையத்தில் அப்பு முருகன் என்பவரை கொலை செய்துவிட்டதாக சரணடைந்துள்ளார்.இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது .

அந்த பகுதியில் காவல் நிலையம் இருந்தும் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து போகாததே காரணம் என்று கூறப்படுகிறது.அது தவிர்த்து அப்பு சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படித்துள்ளார்.அங்கு ஹாஸ்டலில் படிக்கும்போதே ரவுடித்தனம் செய்ததாக கூறப்படுகிறது.

தனது சொந்த ஊருக்கு வந்தவுடன் பெரிதாக சம்பவத்தை செய்துவிட்டு பெரிய ரவுடியாக வர வேண்டும் என்பது அவர் ஆசையாக இருந்ததாக அவரது நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் கூட்டாக சேர்ந்து கொலை செய்திருந்தாலும் நண்பர்களை தப்ப வைத்து விட்டு அப்பு மட்டும் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இது தவிர்த்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல பகுதிகளிலும் திருவள்ளூர் நகரை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் கஞ்சா எளிதில் கிடைக்கிறது.

இது தவிர்த்து நெய்வேலி, பூண்டி, எறையூர் , மொன்னவேடு, ஈக்காடு, ஒதிக்காடு, திருவள்ளூர் ஏரிக்கரை, பெரும்பாக்கம், காக்களூர் என பல பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேற்படி கஞ்சா வியாபாரிகளிடமிருந்து அந்த காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு மாதம் மாதம் கப்பம் கட்டுவதாக தெரிகிறது.

இதில் கள்ளத்தனமாக மது விற்பவர்களிடமும் கஞ்சாவிற்கும் நபர்களிடமும் சுப்பிரமணி என்கிற எஸ்.எஸ். ஐ. மற்றும் சில F.O.P, மற்றும் Home Guard சிலர் உதவியுடன் லஞ்சம் வாங்குவதாக தெரிகிறது.

S.S.I. சுப்பிரமணி

இதுதொடர்பாக டி.ஜி.பி, வடக்கு மண்டல ஐ.ஜி டி.ஐ.ஜி. எஸ்.பி ஆகியோருக்கு புகார் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளதாக புல்லரம்பாக்கம் கிராம இளைஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ரவுடிக்கு பெயர்போன புல்லரம்பாக்கம் கிராமத்தில் காவல் நிலையம் சட்டம் ஒழுங்கை சரிவர கவனிக்க முடியாமல் போனது பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்
குறியாகி உள்ளது.

இறந்துபோன முருகனின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.கொலை செய்த அப்பு வீட்டுக்கும் இறந்து போன முருகன் வீட்டிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொலை செய்த அப்பு என்பவருக்கு பெரிய ரவுடி கும்பலுடன் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க.!