புதுமைப்பெண் திட்டம் தொடக்க விழா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு புதுமைப்பெண் திட்டம் என பெயரிடப்பட்டது. 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமும் இன்று செயல்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் இளம் பகவத் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்படும். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்று வரும் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியிட்டார்.
அதன்படி இன்று தமிழக அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு அவர்கள் உயர்கல்வி அல்லது பட்டைய படிப்பு தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இத்திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை பெற சுமார் 4லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மாணவிகளின் வங்கி கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்தது.
இத்திட்டத்திற்காக 698 கோடி ரூபாய் தமிழர் அரசு ஒதுக்கி உள்ளது இந்த நிகழ்ச்சி இன்று பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.