chennireporters.com

வசூல் வேட்டை நடத்தும் ஆவடி தாலுக்கா ஆபிஸ் உதவியாளர் ரமேஷ் தட்டிக்கொடுக்கும் அதிகாரிகள்.

ஆவடி தாலுக்கா ஆபிஸ் உதவியாளர் ரமேஷ்

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுகிறான் என்பார்கள் ,

உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தான் லஞ்சம் வாங்குவதை கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் ஆவடி தாலுக்கா ஆபிசின் நிலைமையே வேறு.. ஆவடி தாலுக்கா ஆபீஸில் உதவியாளராக இருக்கும் ரமேஷ் கடந்த 6 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த தாலுக்கா ஆபீசில் தாசில்தார், துணை தாசில்தார், தலைமை சர்வேயர் போன்ற முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கி தரும் புரோக்கராக ஏஜென்ட் ஆக வேலை பார்த்து வருகிறார் அலுவலக உதவியாளர் ரமேஷ்.

ரமேஷ் ஆவடி அருகே உள்ள மோரை புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர். இவர் புரோக்கர்கள் என்ன வேலை செய்வார்களா அனைத்து வேலைகளையும் அதிகாரிகளுக்கு செய்து தருவது தான் ரமேஷின் முக்கிய வேலை.

காட்டிக் கொடுப்பது, கொடுப்பது லஞ்சம் வாங்குவது தாசில்தார்கள்  விரும்பிகளாக இருந்தால் அவர்களுக்கு ரூம் போட்டுத் தருவது என ஏ டூ சட் என ஆல் இன் ஆல் வேலை செய்து தருவது இந்த ரமேஷ் தானாம்.

இவரை ஆவடி தாலுகா ஆபிஸ் ஊழியர்கள் ஆல் இன் ஆல் அழகுராஜா என்று தான் ரமேஷை கூப்பிடுவார்களாம் ரமேஷின் கடந்த ஆறு ஆண்டுகால சொத்து மதிப்பு சில பல பெரிய லட்சங்களையும் கோடிகளையே தொடும் என்கிறார்கள்.

அவர் ஆவடி சுற்றி முக்கியமான பகுதிகளில் விளையாட்டுகளும் சில இடங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி இருப்பதாக தெரிகிறது.ரமேஷின் சொத்து மதிப்பை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தாலே உண்மை நிலவரம் தெரியவரும் என்கிறார்கள்.

ரமேஷின் சொத்து மதிப்பை கண்டுபிடித்தால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கே பெரிய மயக்கமே வந்து விடும் என்கிறார்கள். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மோரை புலிகுத்தி பகுதியில் உள்ள பஜனை கோயில் தெருவில் பல லட்சம் மதிப்புள்ள புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார் ரமேஷ்

ஆவடியில் பணியாற்றும் சில நேர்மையான அலுவலக ஊழியர்கள். இவரை கடந்த 19 ஆம் ஆண்டு ஆவடி தாலுக்கா ஆபீஸில் அலுவலகத்தில் தாசில்தார் ஆக இருந்த மதன் குப்புராஜ் ரமேஷின் செயல்பாடுகள் பிடிக்காமல் அலுவலக வேலைகள் எதையும் செய்ய வேண்டாம் என்றும் அவரை கிராம உதவியாளர் பணிக்கு அனுப்ப உத்தரவு போட்டார்.

என்பது குறிப்பிடத்தக்கது ஆவடி தாலுக்கா ஆபீஸ் வட்டாரத்தில் எந்த வேலைகள் ஆக வேண்டுமானாலும் பொதுமக்கள் புரோக்கர்கள் அனைவரும் ரமேஷை தொடர்பு கொண்டு தான் எந்தெந்த வேலைக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்.

எப்போது எங்கு தர வேண்டும் என்று கேட்பார்கள் ஆம் அவர்தான் யார் யாருக்கு எவ்வளவு பணம் என்பதை கட்டிங் ரேட் பேசி முடிவு எடுப்பாராம்.

கலெக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் வீட்டுக்கு தேவையான நான் வெஜிட்டேரியன் ஐட்டங்கள் அதாவது வெள்ளாட்டுக் கறி, நாட்டுக்கோழி, விரால் மீன் என எல்லாவற்றையும் இவர்தான் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சமையலுக்கு தேவையான ஐட்டங்களை கொண்டுவந்து தருவது இவர்தான்.

இன்று ஆவடி தாலுக்கா ஆபீஸ் அதிகாரிகளே சொல்லுகிறார்கள் லஞ்சம் வாங்க தெரிய பயப்படும் புதிய தாசில்தாருக்கு எந்தெந்த பணிகளுக்கு எப்படி எவ்வளவு கட்டிங் வாங்க வேண்டும் என்று தனியாக சிறப்பு பாடம் எடுத்து வருகிறாராம் ரமேஷ்.

ரமேஷ் என்று சொன்னாலே பொதுமக்களும் அதிகாரிகளும் உஷ் ஷ்ஷ் அவரு ரொம்ப பெரிய ஆள் என்கிறார்கள்.

கலெக்டர் விடவா!!!????

இது போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அறிய அவரின் செல்போனை தொடர்பு கொண்டும் அவர் இது புதிய என்னவிருக்கிறது இவர் நம்ம கஸ்டமர் இல்லை என்று நமது அழைப்பை எடுக்கவில்லை அவர் கருத்தை நம்மிடம் சொன்னார் நான் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!