இந்த நிறுவனம் தமிழ்நாட்டை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது
நன்றி புதிய தலைமுறை.
எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார்கள் என்று தரவுகள் இருக்கின்றன. எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன என்று தரவுகளும் இருக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் எந்த அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றன எனத் தரவுகள் இல்லை.
உச்ச நீதிமன்றம் கடந்த மாதம், தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டத்தை சட்டவிரோதமானது எனக் கூறி ரத்து செய்தது. அதோடு, தேர்தல் பத்திரங்களின் அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-க்குள் எஸ்.பி.ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதை மார்ச் 13-க்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், நான்கு மாத காலம் எஸ்.பி.ஐ அவகாசம் கேட்க, `மார்ச் 12-க்குள் மொத்த தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கண்டித்துகொண்டது.
லாட்டரி அதிபர் மார்ட்டி
அதன்படி மார்ச் 12-ம் தேதி மாலை தேர்தல் பத்திர தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ ஒப்படைத்ததுஅதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயமாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில், எஸ்.பி.ஐ அளித்த தேர்த பத்திர தரவுகளை, தேர்தல் ஆணையம் இரண்டு பட்டியலாக தனது இணையதளப் பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறது.அதில், ஒரு பட்டியியலில் எந்தெந்த நிறுவனங்கள்/தனிநபர் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார்கள் என்று தரவுகள் இருக்கின்றன. மற்றொரு பட்டியலில், எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி எந்தெந்த தேதியில் பெற்றன என்று தரவுகள் இருக்கின்றன. ஆனால், எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றன எனத் தரவுகள் இல்லை.எனினும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி உள்ள பத்திரங்கள், அதன் மதிப்பு மற்றும் அதனை வாங்கிய நிறுவனங்கள் முதலிய தகவல்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் முதலாவது பட்டியலின்படி, தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்களின் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது ஃப்யூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் என்ற நிறுவனம்(Future Gaming and Hotel Services ) ஆகும்.இந்த நிறுவனம் தமிழ்நாட்டை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது