chennireporters.com

திருவள்ளூர் மாவட்டத்தில் 06.05.2002 முதல் 30.05.2022 வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் கொரோனா தற்பொழுது கட்டுக்குள் வந்து, பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு சென்று நேரடியாக கல்வி பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற 06.05.2022 முதல் 30.05.2022 வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 06.05.2022 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை, இப்பொது தேர்வு 3 தனித் தேர்வு மையங்கள் உட்பட 178 மையங்களில் நடைபெறுகிறது.

இந்தப் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை திருவள்ளூர் மாவட்டத்தில், 24,846 மாணவர்களும், 23,702 மாணவியர்களும் என மொத்தம் 48,548 மாணவ-மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இப்பொது தேர்வு சுமூகமான முறையில் நடைபெறுவதற்க்கு தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் செய்யப்பட்டுள்ளது.

என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தேர்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை அறிவித்துள்ளார் அதை பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க.!