chennireporters.com

ஆவடி 20-வது வார்டில் இனி எப்போதும் சூரிய வெளிச்சம் தான்.

தி.மு.க.வேட்பாளர் திவ்யா தமிழ்வாணன்

ஆவடி மாநகராட்சியில் 20 வது வார்டில் போட்டியிடும் திவ்யா தமிழ்வாணன் அந்த வார்டில் உள்ள வீடில்லா ஏழை மக்களுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சரிடம் சொல்லி தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இலவச வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

அதுதவிர மத்திய அரசின் மூலம் வழங்கப்படும்இலவச வீடு கட்டும் திட்டத்தின் மூலமும் வார்டு முழுவதும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு பட்டியல் தயார் செய்து அமைச்சர் உதவியுடன் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்.

தெற்கு பஜாரில் வியாபாரிகளுக்கு நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தொட்டி அமைத்து தரப்படும்.கோபாலபுரம் குறிஞ்சி நகர் தென்றல் நகர் வெங்கடாபுரம் தண்டுறை மாங்குளம் சித்தேரி கரை ஆகிய பகுதிகளில் கொசு இல்லாத கழிவுநீர் கால்வாய் அமைத்து தரப்படும்.

முதல்வருடன் தமிழ்வாணன்.

பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நடைமுறையில் கொண்டுவர அமைச்சரிடம் சொல்லி உடனடியாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக அமைத்து தரப்படும்.

தண்டுரை பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் 20-வது வார்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மோட்டார் பைக்குகள் அரசு உதவியுடன் இலவசமாக பெற்று தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேற்கு கோபாலபுரத்தை சேர்ந்த செல்வி என்பவர் பெண்கள் சுயதொழில் செய்ய மகளிர் மேம்பாடு திட்டத்தின் மூலம் லோன் வாங்கி தரவேண்டும் என்றும் மேலும் தையல் மிஷின் வழங்க வேண்டும் என்கிறார் ‌.

மகளிர் குழுக்கள் சுயமாக தொழில் செய்ய வங்கியில் கடன் பெற்று தரப்படும் என்று திமுக வேட்பாளர் திவ்யா அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக திமுகவின் வட்ட செயலாளராக பணியாற்றிவரும் தமிழ்வாணன் பொதுமக்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்து தருகிறார். எந்த பிரதி பலனும் இல்லாமல் மக்களுக்காக உழைப்பவர் என்று பாராட்டுகிறார்.

20-வது வார்டில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் நடைபெறும் சுக, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார் என்கிறார் பீட்டர்.

20 வார்டில் சுடுகாடு இல்லாமல் இருக்கிறது அதை உடனடியாக அமைச்சரிடம் பேசி இடம் தேர்வு செய்யப்பட்டு மின்மயானம் ஏற்படுத்தி தரவேண்டும் என்பது மக்களின் கோரிக்கை அதை உடனடியாக செய்து தருவேன் என்கிறார் திவ்யா தமிழ்வாணன்.

இருபத்தி நான்கு மணி நேரமும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.20-வது வார்டில் உள்ள ஏழை மக்கள் ஏழை மாணவ, மாணவிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அமைச்சரிடம் கொடுத்து அவர்களுக்கு கல்வி கடன் பெற்றுத் தரப்படும்.

உயர் கல்வி பயில வங்கிகள் மூலம் எடுக்கேஷனல் லோன் பெற்று தரப்படும். பழுதடைந்துள்ள பள்ளிகளை சீரமைத்து தரம் உயர்த்தப்படும்.எல்லா வார்டுகளிலும் தெருக்களிலும் சி சி.சி.டிவி அமைக்கப்பட்டு குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்படும்.

தரமான தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படும்.பொது இடங்களில் மக்கள் குப்பைகளை கொட்டாமல் இருப்பதற்கு ஒவ்வொரு தெருக்களிலும் குப்பைத் தொட்டிகளில் வைத்து குப்பைகள் சேகரிக்கப்படும்.

20-வது வார்டில் உள்ள மக்கள் தன்னெழுச்சியாக திவ்யாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள்.20-வது வார்டில் இனி எப்போதும் சூரியன் வெளிச்சம் தான்.

இதையும் படிங்க.!