chennireporters.com

மாத சம்பளத்திற்கு மனைவியாக இருக்க சொன்ன தொழிலதிபர், நடிகை நீதுசந்திரா.

தன்னை மாத சம்பளத்திற்கு மனைவியாக இருக்க சொன்னதாக நடிகை நீதுசந்திரா. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்தார்.   என்னுடைய வாழ்க்கை வெற்றிகரமான நடிகையின் தோல்வி கதை 2005 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நான் தேசிய விருது வாங்கிய 12க்கும் அதிகமான நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன்.

ஆனால் இன்றைக்கு வேலை இல்லை இதனால் பெரிய தொழிலதிபர் ஒருவர் என்னிடம் மாதம் ரூபாய் 25 லட்சம் சம்பளத்தில் தனக்கு மனைவியாக இருக்க முடியுமா என்று என்னிடம் கேட்டார்.   அவர் அப்படிக் கேட்டதும் எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இப்போது என்னிடம் பணம் வேலையும் இல்லை மிகவும் கவலையாக இருக்கிறேன். இத்தனை படங்களில் நடித்த பிறகும் நான் இங்கே வேண்டப்படாதவளாக மாறிவிட்டேன்.

முன்னணி இயக்குனர் ஒருவர் என்னை பட ஒத்திகைக்கு அழைத்திருந்தார்.   ஒத்திகை முடிந்து ஒரு மணி நேரத்தில் என்னை நிராகரித்து விட்டார் என்று தனது பேட்டியில் கூறியிருந்தார் நீதுசந்திரா.

ஹாலிவுட்டிலும் அறிமுகமான நான் இரண்டு படங்களில் நடித்தேன்.   இதுகுறித்து ஹாலிவுட்டில் நான் யாருடைய துணையும் இல்லாமல் நுழைந்ததை சிலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.   அவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது காரம் மசாலா என்ற படத்தில் அறிமுகமான நடிகை நீது.

13b, டிராபிக் சிக்னல் , தமிழில் ஆதிபகவன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். அவர் நடித்த சில படங்களுக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.   ஒரு நடிகை வாழ்க்கை மார்க்கெட் போன பின்பு மற்ற தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனையே ஆணாதிக்க சமூகத்தில் நிறைந்திருக்கிறது  என்பது நீது சந்திராவின் வாழ்க்கையில் தெரிகிறது.

இதையும் படிங்க.!