chennireporters.com

இந்திய அணி தோல்விக்கு காரணமான ரோகித்தை நீக்கவேண்டும். ”கில்லுக்கும் ஸ்ரேயாசுக்கும்50 சவுக்கடி” தரவேண்டும். ரசிகர்கள் கோரிக்கை..

அகமதாபாத்தில் 3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றாத நோக்கத்தில் களமிறங்கி விளையாடாத இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் அபாரமாக தோல்வியடைந்தது.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கத்தில் களமிறங்கி விளையாடாத  இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.  இந்திய வீரர்களை சமூக வலை தளங்களில் மிகவும் கேவலமான, ஆபாசமான வார்த்தைகளில் திட்டியும் தங்களது வருத்த த்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோற்றதற்கான 6 முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.

இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் பொறுப்புடன் விளையாட  தவறினார். ரோகித் சர்மா தான் இந்த தேசத்திற்காகவும் ஒட்டு மொத்த ரசிகர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு கேப்டன் என்ற பொறுப்பையும் மறந்து  முட்டாள் தனமாக  விளையாடியது யாரும் நம்மை கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற கர்வமும் தலைக்கனமே காரணம். ஆனால் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க தவறியதால் அந்த மைதானத்திலேயே “அவர்களுக்கு  50 சவுக்கடிகள் ” தரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர் ரசிகர்கள்.

குறிப்பாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மெதுவாக பந்துகளை வீசி இந்திய பேட்டஸ்மேன்களை தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை ஆட விடாமல் தடுத்தனர். சிறிதுநேரம் அதிரடி காட்டிய ரோகித் சர்மா, அவரும் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா தொடக்கத்திலேயே அதிரடியாக அடித்து ஆடவேண்டிய சூழலும் அவசியமும் ஏற்படாத நிலையில் பொறுப்பற்ற முறையில் விளையாடி அணி தோற்றதற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் அது தவிற நிரந்தரமாக கிரிக்கெட்டிலிரிந்து அவரை நீக்கவேண்டிம் என்கின்றனர் ரசிகர்கள்.

குறிப்பாக, விராட் கோலியும், கே.எல்.ராகுலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 11 முதல் 30 ஓவர்கள் வரை இந்திய அணியால் 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒட்டுமொத்தமாக, இந்திய அணி, தனது இன்னிங்சில் 13 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களை மட்டுமே அடித்தது.

ஒரு கட்டத்தில் இந்திய அணி148/4 என்ற நிலையில் இருந்தபோது,  சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வந்தார். ஆனால் ஜடேஜாவால் 22 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவை முன்னோக்கி அனுப்பாததன் மூலம் இந்தியா ஒரு வாய்ப்பைத் தவறவிட்டதாகத் தெரிகிறது. திட்டமிட்டே இந்த தவரை ரோகித் ஷர்மா செய்ததாக தெரிகிறது. பெரிய ஷாட்கள் அடிக்கும் திறமை பெற்ற சூர்யகுமார் யாதவ், அவரது இயல்பான பாணியில் விளையாடியிருந்தால், இந்தியா இன்னும் சிறந்த ஸ்கோரை எட்டியிருக்கலாம். ஆனால் அவரும் அடித்து ஆட வேண்டிய நேரத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் எந்த திசையில் பந்துகளை அடித்தாலும், அங்கே ஒரு பீல்டர் அதனை தடுத்துவிடுகிறார். ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் வியூகம், எந்த ஒரு பந்தையும் எளிதாக பவுண்டரிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 40 ரன்களை அவர்களே தடுத்து நிறுத்தி இருப்பார்கள். பவுண்டரிகளுக்கு பந்துகளை போக விடாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அரணாக இருந்து ரன்களை கட்டுபடுத்தினார்கள். ஆனால் இந்திய அணியின் பீல்டிங் வியூகம் பெரிய அளவில் எடுபடவில்லை என்றே சொல்லலாம். அதற்கான எந்த வியூகத்தையிம் ரோகித் செய்ததாக தெரியவில்லை.

பவர் ப்ளேவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 47 ரன்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றியதால், ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறியது. இதுமாதிரியான தருணத்தில் மற்ற அணி வீரர்கள் விக்கெட்டை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மெதுவாக விளையாடுவார்கள். ஆனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஹெட், இந்திய பந்துவீச்சை சிதறவிட்டு அவர்களின் நம்பிக்கையை முதலில் சிதைத்தார். ஹெட் – லபுசேன் பார்டன்ர்ஷிப், இந்தியாவின் கோப்பை வெல்லும் கனவை தகர்த்தது. அதிரடியை குறைக்காத ஹெட், சதம் கடந்து ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

ஏமாற்றம் அளித்த இந்திய சுழல்பந்துவீச்சு நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் கூட எடுக்காத ஒரே போட்டி என்றால் அது இந்த போட்டி தான். வேகத்தில் ஒரு பக்கம் சுழலில் ஒரு பக்கம் என இந்திய பவுலர்கள் அச்சுறுத்தி வந்த நிலையில் குல்தீப் மற்றும் ஜடேஜா முழுமையாக 10 ஓவர்கள் விசியும் அவர்களால் ஒரு விக்கெட்டை கூட எடுக்கமுடியவில்லை.

அதற்கான காரணங்களை இந்திய கிரிகெட் அணி ஆராய்ந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் ரசிகர்கள். சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றாமல் இருந்ததும் இந்திய அணியின் தோல்விக்கு  பெரும் காரணமாக அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.  இந்த ஆட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றிருக்கலாம் என்று பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!